fbpx
Connect with us

Cinemapettai

பிக்பாஸ் சீசன் 2 கமலுக்கு பதில் யார்.?

News | செய்திகள்

பிக்பாஸ் சீசன் 2 கமலுக்கு பதில் யார்.?

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 ஜூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுப்புரை ஆற்றி நடத்துகிறார்.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி இந்தி நிகழ்ச்சியான பிக் பாசை அடிப்படையாகக் கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ . இதில் போட்டியாளர்கள் இந்த நோக்கத்திற்காகக் கட்டப்பட்ட வீட்டில் வாழ்கின்றனர், மேலும் இவர்கள் உலகின் பிற தொடர்பிலிருந்து இருந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

ஒவ்வொரு வாரமும், வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கு, ஒவ்வொருவரும் அவர்களுடன் குடியிருக்கும் சகப் போட்டியாளர்கள் இருவரைத் பரிந்துரைப்பார்கள். இவ்வாறு வெளியேற்றுவதற்கு அவர்களுக்குள் ஒரு பொது வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டிவரும்.இதில் பரிந்துரைக்கப்பட்டவர்களில் வெளியேறும் ஒருவரை மக்கள் ஓட்டு தீர்மானிக்கும்.

இறுதி வாரத்தில், வீட்டில் மீதமிருக்கும் மூவரில், யார் வெற்றியாளர் என்பதைப் பொதுமக்களின் வாக்களிப்புக்கு விடப்படும். பிற பிக் பிரதர் நிகழ்ச்சிகளைப் போலன்றி, இந்தியப் பதிப்பானது வீட்டில் தங்க, பிரபலங்களைப் பயன்படுத்துகிறது, பொது மக்களிலிருந்து யாரையும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதில்லை.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அவருக்கு ரூ. 50 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்-2வை விரைவில் ஆரம்பிக்க தயாராகிக் கொண்டிருக்கிறது விஜய் டிவி.ஆனால் அந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க மாட்டார் என்று தெரிகிறது. அரசியலில் ஈடுபடுவதற்காக அவர் தயாராகிக் கொண்டிருப்பதால் பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியை நடிகர் சூர்யா தொகுத்து வழங்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.

ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி -என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த தகவலை விரைவில் விஜய் டிவி வெளியிடும் என்று கூறப்படுகிறது.

கமல்ஹாசன் போன்ற பழுத்த நடிகர் இருந்த இடத்தில் ஒரு இளம் நடிகரை வைத்து பார்க்கமுடியுமா..?. ரசிகர்கள் சூர்யாவை ஏற்றுக்கொள்வார்களா? அப்படியே இருந்தாலும், பிக்பாஸ் போட்டியாளர்கள் சூர்யாவின் பேச்சை கேட்டு நடப்பார்களா? என்ற சந்தேகம் எழுகிறது.

அதும் இல்லாமல் biggboss வீடு மிகவும் பிரமாண்டமாக செட் போட்டுள்ளனர் இந்த செட் மிகவும் வித்யாசமாக இருக்கிறது இதை அனைவரும் விரைவில் பார்ப்போம்.

ஒரு வழியாக பெரிய முதலாளியின் 100 நாள் வேலைத் திட்டம் நிறைவுக்கு வந்துவிட்டது. பலரும் வெறுத்த ஆரவ்வுக்கு வெற்றியாளர் பட்டம் போனதில் இன்னும் வெறுத்துப்போய் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top