Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எமி ஜாக்சனுடன் இருந்த பெண்ணை கண்டுபிடித்த நெட்டிசன்கள்..

amy jackson

நடிகை எமி ஜாக்சனின் சர்ச்சை புகைப்படத்தில் இருந்த பெண்ணை அலசி ஆராய்ந்து கண்டுபிடித்து விட்டனர் நெட்டிசன்கள்.

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அப்படத்திற்காக பலரை ஆடிஷன் செய்த படக்குழுவிற்கு திருப்தியே ஏற்படவில்லையாம். இதை தொடர்ந்து, உலக பதின்வயது அழகி போட்டியின் இணையத்தளத்தை தயாரிப்பு தரப்பு எதேர்ச்சையாக தேடி இருக்கிறார்கள். அங்கு தான் எமியின் புகைப்படத்தை பார்த்த குழு, அவரை மதராசபட்டினம் படம் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தனர்.

நடிப்பில் எந்த வித அனுபவமே இல்லாத எமிக்கு முதல் படமே செமையான வரவேற்பை பெற்று தந்தது. இதை தொடர்ந்து, தமிழ் சினிமாவிலே அவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. விஜய், தனுஷ், உதயநிதி உள்ளிட்ட நாயர்களுடன் ஜோடி போட்டு இருக்கிறார். எமியின் திரை வாழ்வில் முக்கிய மைல் கல்லாக அமைந்து இருப்பது ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் 2.ஓ படம் தான். இப்படத்தில் தனி நாயகியாக நடித்து இருக்கும் எமியுடன், தமிழ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் ஸ்டார் ஐகான் அக்‌ஷயும் நடித்துள்ளனர். முதல் பாகமே பிரம்மாண்டமான வரவேற்பை பெற்று இருப்பதால், இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. தமிழ், பாலிவுட்டை தொடங்கி எமி ஜாக்சன் ஹாலிவுட் தொடர்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

எமி ஜாக்சன் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி தன் சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை அதிர விடுவார். சமீபத்தில், ஒரு பெண்ணுடன் மிக நெருக்கமாக எமி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாக பரவியது. அதிலும், அப்புகைப்படத்திற்கு மனைவி வாழ்க்கை என அவர் குறிப்பிட்டது தான் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது. ஆனால், எமியுடன் இருக்கும் பெண் யார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

Amy-jacksonஇந்நிலையில், அப்பெண்ணை சமூக வலைதளவாசிகள் தேடி கண்டுபிடித்து உள்ளனர். எமியுடன் இருந்த அப்பெண்ணின் பெயர் நீலம் கில். இவருக்கு தற்போது வயது 23 ஆகிறது. மாடல் துறையில் இருக்கும் நீலம், எமியை போல பல கவர்ச்சி படங்களை வெளியிடுவதில் கில்லாடி என்கிறார்கள் நெட்டிசன்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top