சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் ‘விவேகம்’. அஜித்தின் 57-வது படமான இந்தப் படத்துக்காக சிவாவுடன் மூன்றாவது முறையாக ஒன்று சேர்ந்தார் அஜித்.

அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், கருணாகரன் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் செர்பியா, பல்கேரியா, ஆஸ்திரியா, குரோஷியா போன்ற பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டது.

இந்தப் படம், ஹாலிவுட் தரத்திலிருக்கும் என படத்தின் இயக்குநர் சிவா கூறியிருக்கிறார். சத்யஜோதி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தனர். பரபரப்பான சேஸிங், அதிரடி ஆக்‌ஷன் என எல்லா வகையிலும் ரசிகர்களைக் கவரும்படியாகப் படம் தயாரித்தனர்  எனச் சொன்னார்கள் படக்குழு. யூ/ஏ சான்றிதழ் பெற்றிருக்கும் ‘விவேகம்’ ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியானது.

அஜித்தின் விவேகம் பல கலவையான விமர்ச்சனங்களை தாண்டி பெரும் வசூல் சேர்த்தது விவேகம் படத்தின் டீசர் வெளி வந்து சாதனை படைத்தது அதே போல் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமாக அமைந்த்தது விவேகம் படம்,

தல அஜித் அப்பொழுது விவேகம் படத்தில் எடுத்த சில ரிஸ்க்கான செயல்களால் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 3 மாதத்திற்கு கட்டாய ஓய்வில் உள்ளார்.

அதே நேரத்தில் ரசிகர்கள் தல 58 அறிவிப்பிற்காக வழி மேல் விழி வைத்து ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் தல அஜித் எதுவும் மூன்று மாதங்களுக்கு பிறகு தான் என மௌனத்தை கடைபிடித்து வருகிறார்.

தல 58 படத்தின் இயக்குனர் இவர் தான், அவர் தான் என பல தகவல்கள் தினம் தினம் வலம் வந்து கொண்டே இருக்கின்றன, இந்நிலையில் தற்போது புதிதாக தயாரிப்பு நிறுவனம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

ஆம், அது என்னவென்றால் அஜித்தின் அடுத்த படத்தை சர்வதேச தயாரிப்பு நிறுவனமான FOX STAR STUDIOS தயாரிக்க இருப்பதாகவும், இதற்கு தல அஜித்தும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

தீயாக பரவும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது இன்னும் உறுதியாகவில்லை, இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகளும் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எது எப்படி இருந்தாலும் அஜித் நடிக்கபோகும் 58 வது படத்தின் அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப் படுகிறது,இதனை எதிர்பார்த்து அஜித் ரசிகர்களும் காத்து கொண்டு இருக்கின்றனர். படத்தின் எந்த அறிவிப்பு வந்தாலும் சமூகவலைதளங்களில் தீயாய் பரவும் ஏன் என்றல் அஜித்திற்கு  ரசிகர்கள் கூட்டம் அதிகம். இயக்குனர் யார் என்பதை அஜித் தான் முடிவு செய்ய வேண்டும்.