Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவின் இளம் நாயகி நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியா?
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி கோலிவுட்டின் இளம் நாயகி என்ற சுவாரசிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் 1964-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் ரவிச்சந்திரன். இயல்பான நடிப்பாலும், மிரட்டல் வில்லனாகவும் ரசிகர்களை கவர்ந்தவர். கோலிவுட்டில் மறக்க முடியாத நடிகராக தடம் பதித்தார். இவரின் நான், உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு, இதயக்கமலம், ஊமை விழிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். இவருக்கு பாலாஜி, அம்சவர்தன் என்ற இரு மகன்களும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர். இவரின் பேத்தி கோலிவுட்டில் நாயகியாக இருக்கிறார்.
அவர் வேறு யாருமில்லை. நாயகி தன்யா ரவிச்சந்திரன் தான் அது. மகள் லாவண்யாவின் பேத்தியான தன்யா, இளம் வயதில் இருந்து அவரது தாத்தா நடிப்பால் நடிப்புத் துறையில் அதிகம் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம். இதை தொடர்ந்து, பட்டப்படிப்பை முடித்த தன்யா மிஷ்கினின் துப்புரவாளன் படத்தில் தான் முதலில் ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், பல காரணங்களால் அப்படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது.
இதை தொடர்ந்து சசிக்குமார் இயக்கத்தில் பலே வெள்ளையா தேவா, பிருந்தாவனம் படத்தில் அருள்நிதியுடனும் நடித்திருந்தார். இரண்டு படங்களிலேயே தன்யா நடிகையாக முத்திரை பதித்தார். மூன்றாவது படமான கருப்பனில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் நடித்தது தன்யாவின் திரை வாழ்வை மெருகேற்றியது.

Tanya-Ravichandran
தன்யாவின் இயற்பெயர் அபிராமி. அவருக்கு தன்யா என்ற பெயரை கொடுத்தது இயக்குனர் மிஷ்கின் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
