ஓ காதல் கண்மணி என்ற படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் துல்கர் சல்மான்.

இவரின் நடிப்பில் மார்ட்டின் பிரகட் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான படம் சார்லி. வித்தியாசமான கதைகளத்தை கொண்ட இப்படம் ரசிகர்களின் விருப்ப படமாக அமைந்ததோடு பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல கலெக்ஷனை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரமோத் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. ஆனால் இன்னும் இப்படத்தில் நடிப்பவர்கள் பற்றி என்ற அறிவிப்பும் வெளியாகவில்லை.

மலையாளத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த துல்கரின் கதாபாத்திரத்தில் தமிழில் யார் நடிக்க போகிறார் என்ற கேள்வி எழும்பியுள்ளது.