Connect with us
Cinemapettai

Cinemapettai

ratchasan-villain

Tamil Cinema News | சினிமா செய்திகள்

யார் அந்த கொடூரமான ராட்சசன்! விடை தெரிந்தது

யார் இந்த ராட்சசன்? சமீபத்தில் வெளிவந்து தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த படம் ராட்சசன். இதன் வெற்றி தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இப்பொழுது ஹாலிவுட்டில் படத்தை எடுக்கப் போகிறார்கள். இந்த படத்தில் வரும் அனைத்து திருப்புமுனை காட்சிகளும் மிக முக்கியமானது. விஷ்ணு விஷாலுக்கு எந்த அளவிற்கு முக்கியமான கேரக்டர் இருந்ததோ அதே அளவிற்கு இணையான கதாபாத்திரம் இந்த சைக்கோ கதாபாத்திரம். குறிப்பாக சொல்லப்போனால் ஹீரோவை விட இவருக்கு தான் முக்கியமான காட்சிகள்.

ராட்சசன் படமே அந்த வில்லனை சுற்றி தான் நடக்கும். அவர் பண்ணும் கொலை மிகக் கொடூரமாக அமைந்தது அவரின் உருவம் ஒரு காரணம். யார் இந்த ராட்சசன் இவரைப் பற்றிய ஒரு செய்தி கூட வெளிவரவில்லை ஆனால் இவர் இல்லை என்றால் இந்தப்படம் வெற்றி விழா கொண்டாடி இருக்குமா என்பது சந்தேகம்தான்.

ராட்சசன் வில்லனை வெளி உலகத்திற்கு கொண்டு வராமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இது இயக்குனருக்கும் நடிகருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். ஹாலிவுட் செல்வாரா அல்லது ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் இணைவாரா? என்பதும் டைரக்டர் வசமே உள்ளது. அந்த ராட்சசனின் பெயர் சரவணன். டப்பிங் ஆர்டிஸ்டாக இருந்தார் இவரது உருவம் இயக்குனருக்கு பிடிக்க, இவரது பாடி லாங்குவேஜ் இயக்குனருக்கு பிடிக்க இந்தக் கதாபாத்திரத்தில் இணைந்தார். இந்த ராட்சசன் பல படங்களில் நடிக்க சினிமா பேட்டையின் வாழ்த்துக்கள். இது மாதிரியான திறமையான நடிகர்களை சினிமாவிற்கு மற்றவர்களும் கொண்டு வரவேண்டும்.

saravanan-chrishtopher

saravanan-chrishtopher

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top