ஐ.பி.எல் தொடரில் புனே அணி மூலம் இந்திய கிரிக்கெட் அணிக்கு சேவாக்கை போன்ற சிறந்த துவக்க வீரர் ஒருவர் கிடைத்துள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் தொடர் மூலம் புனே அணியில் அறிமுகமான அந்த அணியின் துவக்க வீரர் ராகுல் த்ரிப்பதி தனது திறமைக்கு கிடைத்துள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு, அந்த அணிக்கு சிறந்த துவக்கத்தை அளித்து வருகிறார்.

புனே அணிக்காக விளையாடியுள்ள 9 போட்டிகளில் 352 ரன்கள் எடுத்திருக்கும் திரிபாதி பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போன வார்னர் உள்ளிட்ட பெரும் ஜாம்பவான்களை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தையும்  பிடித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  செமையா, சூப்பரா, எனக்கு ரொம்ப பிடிச்ச டைரெக்டரோட பட பர்ஸ்ட் லுக் வெளியாகப்போகுது - விஜய் சேதுபதி !

ராகுல் த்ரிபாதியின் குடும்பம்;

 

தோனி பிறந்த மண்ணான ராஞ்சியில் பிறந்த திருப்பதி இதுவரை விளையாடியுள்ள அனைத்து உள்ளூர் தொடர்களிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். உள்ளூர் போட்டிகளில் இதுவரை இரண்டு முறை 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்களும் அடித்து அதிரடியான துவக்க வீரராக திகழ்ந்துள்ளார்.

அதிகம் படித்தவை:  தோனி பிறந்தநாளில் சதம் அடித்த சின்ன ‘தல’ கோலி: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா!

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான தவான் போன்ற சீனியர் வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில் அவர்களின் இடங்களை த்ரிப்பதி போன்ற இளம் வீரர்களை கொண்டு பூர்த்தி செய்யும் பட்சத்தில் இந்திய அணிக்கு மேலும் பல தோனிகளும், கோஹ்லிகளும் கிடைக்கலாம் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.