இளைய தளபதி விஜய் பாக்ஸ் ஆபிஸின் செல்லப்பிள்ளை. இவருக்கு 6லிருந்து 60 வயது வரை அனைத்து தரப்பினர்களும் ரசிகர்களாக உள்ளனர்.

இந்நிலையில் இவரை போலவே கமர்ஷியல் படங்களாக நடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களாக கொண்டவர் சிவகார்த்திகேயன்.

இவரின் ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளிவர டுவிட்டரில் இந்திய அளவில் ட்ரண்ட் ஆனது, இதில் பலரும் சிவகார்த்திகேயனை அடுத்த இளைய தளபதி என குறிப்பிட்டனர், இவை விஜய் ரசிகர்களிடம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.