புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

இன்று பிக் பாஸில் வெளியேறப் போவது இவர் தான்.. விசபூச்சிக்கு கட்டம் கட்டிய ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு நபர் பிக் பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் செய்யப்படுவார்கள். அந்த வகையில் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி துவங்கப்பட்டு மூன்று வாரம் நிறைவடைந்துள்ள நிலையில் முதல் வார இறுதியில் நாடியா சாங் பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் நபராக எலிமினேட் செய்யப்பட்டார்.

அதன் பிறகு கடந்த வாரம் நாமினேஷன் நடைபெற்று மக்கள் அளித்த வாக்கின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை இன்று ஒரு நபர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட உள்ளார். எனவே இந்த சீசனில் இரண்டாவது எலிமினேட் செய்யப்படும் நபர் அபிஷேக். மேலும் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படும் நபர் அபிஷேக் என்பதை அறிந்த பிக்பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கின்றனர்.

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே கொஞ்சம்கூட நாவடக்கம் இல்லாமல் ஓவரா பேசிக்கொண்டிருந்த அபிஷேக்கின் நடவடிக்கை நிகழ்ச்சியை பார்ப்போருக்கு எரிச்சல் மூட்டுகிறது. அத்துடன் அவர் சமீபத்தில் நடைபெற்ற பஞ்சதந்திர நாணயம் டாஸ்கின் போது கொஞ்சம் ஓவராகவே நடந்து கொண்டுள்ளார்.

ஏனென்றால் நாணயத்தை எடுத்து தாமரையை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அடிக்கடி தாமரை இடமே சென்று அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்ததால், தாமரை திடீரென்று அபிஷேக் காலில் விழுந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்போருக்கு முகம் சுளிக்க வைத்தது.

ஏனென்றால் ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் அதை அவருக்கு தெரியாமல் செய்வதுதான் நாகரீகம். ஆனால் இதை மறந்து அபிஷேக், தாமரையை காப்பாற்றி ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்குவது அவசியம் இல்லாத செயல். அத்துடன் இவர் பிரியங்காவுடன் சேர்ந்து செய்த அழிச்சாட்டியத்திற்கு அளவில்லாமல் போனது. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள், ஓவர் ஸ்டேட்டஜி வச்சா இப்படித்தான் என்று கூறும் வகையில் அபிஷேக்கிற்கு குறைந்த வாக்குகளை அளித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி விட்டனர்.

bigg-boss-eviction
bigg-boss-eviction

மேலும் அபிஷேக் சீக்கிரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றால் தான் அவருடைய இமேஜ் கொஞ்சமாவது காப்பாற்றப்படும். அத்துடன் அபிஷேக் வெளியேறினால் பிரியங்காவின் ஆட்டமும் குறைந்துவிடும்.இருப்பினும் பஞ்சதந்திர நாணயத்தை வைத்து பிக்பாஸ் வீட்டில் அபிஷேக் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஆகையால் இனிவரும் நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி எப்படி போகும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். கடந்த வாரத்தில் விஷ பூச்சி போல் செயல்பட்டது அபிஷேக் மட்டுமே இதனால் ரசிகர்கள் வெறுத்துப் போய் அவரை வெளியேற்ற முடிவு செய்துவிட்டனர் போல.

- Advertisement -

Trending News