மக்களவை துணை சபாநாயகர். மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த, பாரளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளருக்கு பேட்டி அல்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அதிமுகவில் உள்ளாரா? என்பது குறித்து எனக்கு தெரியாது என தெரிவித்தார்.

ஏற்று கொள்ள முடியாது தொடர்ந்து பல கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய பாரளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையிடம், டி.டி.வி தினகரன் துணை பொது செயலளாராக ஆக பொறுப்பு ஏற்றது ஏற்றுக் கொள்ள முடியாது” என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறி இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சாபாநாயகர், தீபக் என்பவர் யார் என்பதே எனக்கு தெறியாது என்றும் , அவர் அதிமுகவில் தான் இருக்கின்றாரா என்பதும் எனக்கு தெரியாது என்று குறிப்பிட்டார் .

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.