இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 61’ படத்தின் படப்பிடிப்பு தற்போது போலந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. ஷங்கரிடம் இருந்து பாடத்தால் படப்பிடிப்புக்கு கடுமையான செக்யூரிட்டி போட்டுள்ளாராம் அட்லி. ஆனால் அதையும் மீறி படப்பிடிப்பு மற்றும் விஜய்யின் கெட்டப் குறித்த புகைப்படங்கள் தொடர்ந்து இணையதளங்களில் வெளியாகி வருவது அட்லியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில் முதல்கட்ட விசாரணையின் முடிவில் வெளியில் இருந்து யாரும் வந்து புகைப்படங்கள் எடுத்து வெளியிடவில்லை என்றும் படக்குழுவினர்களில் ஒருவர் தான் இந்த வேலையை செய்வது என்பதும் தெரிய வந்துள்ளதாம். எனவே அந்த கருப்பு ஆட்டை கண்டுபிடித்து பிரியாணி போட வேண்டும் என்று அட்லி பயங்கர கடுப்பில் உள்ளாராம்.

இப்போதைக்கு ஒருசிலர் அட்லி சந்தேகப்படுவதாகவும், அவர்களில் புகைப்படத்தை வெளியிடும் அந்த கருப்பு ஆட்டை அவர் விரைவில் கண்டுபிடிப்பார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய், வேட்டி அணிந்து நிற்பது போன்ற காட்சி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு பின்னர்தான் விஜய்-அட்லி குழு இந்த அதிரடி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாம்