சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்த படம் விவேகம் இப்படம் கலவையான விமர்ச்சனங்களை தாண்டி நல்ல வசூல் பெற்றது அனைவரும் அறிந்ததே.அஜித்தின் திறமை அனைவருக்கும் தெரியும்.ajith vivegam

பிரபல டிவியில் ஒளிபரப்பாகிவரும் சந்திரலேகா தொடரில் ரிப்போட்டர் சந்திரவாக வரும் ஸ்வேதா பண்டேக்கர் பற்றி உங்களுக்கு தெரியுமா?…பூனேவைச் சேர்ந்த இவர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இவர் நடிப்பிற்கு வருவதற்கு முன்பு மொடலிங் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் தான் அஜித் நடித்த ஆழ்வார் படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடித்துள்ளார். வல்லுவன் வாசுகி, நான் தான் பாலா படத்திலும் விவேக் ஜோடியாக நடித்துள்ளார்.அஜித்துடன் நடித்த அனுபவத்தை கேட்ட பொழுது, தல-க்கு தங்கையான நடித்தது மிகவும் குஷியாக உள்ளதாக தெரிவித்துள்ள இவர், தன்னை அவர் குட்டி குஷ்பு மாதிரி இருப்பதாக கூறியுள்ளார்.

படத்தில் அறிமுகமாகி தற்போது சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதைக் கவர்ந்துள்ளார் ஸ்வேதா. மீண்டும் அஜித்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தால் நான் உங்களது தங்கச்சி என்று கூறுவாராம்… ஞாபகம் இல்லையென்றால் அவருடன் ஒரு செல்பி மட்டும் எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.