திரைப்படத்துறையில் தமிழ் நடிகைகளில் ஜோதிகா ஒரு முன்னணி நடிகை ஆவார் இவர் தமிழ் திரைப்படங்கள் அதிகம் நடித்துள்ளார் முதன் முதலில்  வாலி என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஜோ ஜோ ஜோதிகா என அவரை ரசிகர்கள் கொண்டாடும் நேரத்தில் திருமண செய்து நடிப்புக்கு முழுக்கு போட்டார். தற்போது மீண்டும் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி வெற்றிகரமாக நடித்து வருகிறார் ஜோதிகா.ajith vivegam

மகளிர் மட்டும் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அண்மையில் ஜோதிகா பேட்டி கொடுத்திருக்கிறார். அப்போது அவரிடம் அஜித் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், என்னுடைய ஆரம்ப காலத்தில் அஜித்துடன் சில படங்களே நடித்துள்ளேன்.

அவர் மிகவும் அருமையான மனிதர். நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் போது தான் அஜித், ஷாலினி காதல் பெரிதாக பேசப்பட்டது என்று கூறியுள்ளார்.