Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினியை கௌதம் மேனன் இயக்குவதை தடுத்தது யார்? தீயாய் பரவும் புதிய தகவல்

துருவ நட்சத்திரம் படத்தை ரஜினியை வைத்து இயக்க இருந்த கௌதம் மேனன் வாய்ப்பை இடையில் யாரோ தட்டி விட்டு இருப்பதாக வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.

இயக்குநர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக சினிமாவிற்கு அறிமுகமானவர் கௌதம் வாசுதேவ் மேனன். மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனரானார். முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பல படங்களை இயக்கினார். மற்ற ஹிட் இயக்குனர்கள் போல கௌதம் மேனனும் தனக்கென ஒரு அடையாளத்தை படத்தில் வைத்து விடுவார். இவரின் பல படங்களில் உருகி உருகி காதலிக்கும் ஜோடிகள் கடைசியில் பிரிந்து விடுவர். அதில் கூட ஒரு சுகம் இருக்கும் என்பதையே தனது படத்தில் அதிகம் காட்சிப்படுத்தியவர். கமலை வைத்து வேட்டையாடு விளையாடு, சிம்புவை வைத்து விண்ணைத்தாண்டி வருவாயா, சூர்யாவை வைத்து வாரணம் ஆயிரம், காக்க காக்க, அஜித்தை வைத்து என்னை அறிந்தால் ஆகிய படங்கள் இன்று வரை இவரின் ட்ரேட் மார்க் லிஸ்டில் இடம் பிடித்து இருக்கிறது.

தனது தயாரிப்பில் வெளிவரும் அனைத்து தமிழ்த் திரைப்படங்களுக்கும் தூய தமிழில் பெயரிடுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் கௌதம் மேனன் இருந்து வருகிறார். தனுஷின் நடிப்பில் எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார். துருவ நட்சத்திரம் படத்தின் சமீபத்திய இரண்டு டீசர்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஹிட் அடித்தது.

இந்நிலையில், துருவ நட்சத்திரம் படத்தின் கதையை தயாரிப்பாளர் தாணுவின் உதவியோடு முதலில் ரஜினிகாந்திடம் தான் சொல்லி இருக்கிறார். கதையை கேட்ட சூப்பர்ஸ்டார் ‘சூப்பராக இருக்கு. யார் எல்லாம் தொழில்நுட்பக் கலைஞர்கள், எத்தனை நாள் தேவைப்படும். படம் பண்ணலாம்’ என ஓகே சொல்வது போல தான் பேசி இருக்கிறார். தொடர்ந்து, தயாரிப்பாளர் தாணுவும், இத்தகவலை யாரிடமும் சொல்ல வேண்டாம். தீயாக பரவிடும் என தெரிவித்து அனுப்பி வைத்து இருக்கிறார்.

கௌதம் மேனனும் தன்னுடைய குழுவினருடன் அமர்ந்து அடுத்தக்கட்ட பணிகளில் பிஸியாகி இருக்கிறார். ஆனால், அன்று மாலையே கால் செய்த தாணு, ஏதோ பிரச்சினை என்று நினைக்கிறேன். ரஜினிகிட்ட யாரோ ஏதோ சொல்லியிருக்கிறார்கள். இப்போது நடக்காது என தெரிவித்தாக கௌதம் மேனன் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு நடுவில் யார் ரஜினி சாரிடம் என்ன சொன்னது என எதுவுமே தெரியாது. நான் அவரை இயக்க கூடாது என நினைத்த நல்லவர் யாரோ ஏதோ சொல்லியிருக்காங்கனு மட்டும் தெரியும் என்று ஆதங்கப்பட்டு இருக்கிறார். தற்போது கோலிவுட்டினர் மத்தியில் யார் அந்த சகுனி என்ற யோசனை தான் அதிகமாக பரவி இருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top