biggboss

அமெரிக்கா நாட்டில் உள்ள பிரபல தொலைக்காட்சியில் ஒளி பரப்பான ‘பிக் பிரதர்’ என்ற நிகழ்ச்சியால் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு அடைந்தது.

அந்த வெற்றியின் நீட்சியாக இந்நிகழ்ச்சி பல நாடுகளில் வெவ்வேறு விதங்களில் தயாரிக்கப்பட்டு அங்கும் வெற்றி பெற்று சில வருடங்களுக்கு முன் இந்தியாவில் மிகப்பிரம்மாண்டமாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்க ‘பிக் பாஸ்’ என்ற பெயரில் அறிமுகமானது.

அதிகம் படித்தவை:  ஐஸ்வர்யா தத்தா லெஸ்பியனாக இவ்வளவு கேவலமாக நடித்துள்ளர்களா.! வைரலாகும் வீடியோ

அதன் பின் பல மொழிகளில் தயாரிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுகு மொழிகளில் வெளியானது தமிழில் உலக நாயகன் கமல் ஹாஸனும் தெலுகில் ஜூனியர் என்டிஆரும் தொகுத்து வழங்கி வருகின்றனர். இதில் தெலுகு மொழியில் நடைபெற்று வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த பாகம் முடிவடைந்து வெற்றியாளர் யார் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்! இனி என்ன ஆகுமோ?

அதன் படி தெலுகு நடிகர் சிவா வெற்றியாளரான நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜூனியர் என்டிஆர் அறிவிப்பு செய்துள்ளார். நடிகர் சிவா சமுத்திரகனி இயக்கிய நாடோடிகள் படத்தின் தெலுகு பதிப்பில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது