சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதும் பார்த்து ரசிக்கும் இரண்டு விஷயங்கள் கார்ட்டூன் மற்றும் ரஸ்லிங். அப்படி நம்மை கவர்ந்த ரஸ்லிங் பிரபலங்கள் அந்த துறை மட்டுமல்லாது வேறு சில விளையாட்டு துறைகளிலும், சினிமாக்களிலும் பங்களித்து சாதனை படைத்துள்ளனர்.
அப்படி சினிமாவில் நடித்த ரஸ்லிங் பிரபலங்கள் சிலரை பற்றி பார்ப்போம் வாங்க.
Triple H:

WWE உலகின் சூப்பர் ஸ்டார் அன்று முதல் Triple H என்றால் அது மிகையாகாது, சில முறை வில்லன் போலவும், சில முறை ஹீரோ போலவும் ரஸ்லிங் உலகில் தனித்து உலா வந்தவர். இவரது இயற்பெயர் Paul Michael Levesque. இவர் இதுவரை 12 படங்களில் நடித்துள்ளார். அவற்றுள் இரண்டு Scooby Doo படங்களும் அடக்கம். இவர் நடிப்பில் பெரு வெற்றியடைந்த படம் என்றால் அது Inside Out என்ற படம்தான்.
Rock:

WWE விளையாட்டில் வெறி பிடித்த ரசிகர் கூட்டம் ஒருவருக்கு உண்டென்றால் அது Rockகிற்குதான் இருக்கும். இவரது இயற்பெயர் Dwayne Douglas Johnson. இவர் Beyond The Mat, Longshot, The Scorpion King, Hercules, Fast And Furious போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
John Cena:

தற்போதைய இளசுகளின் இளைய தளபதி இவர்தான். முழுப்பெயர் John Felix Anthony Cena. 2006ம் ஆண்டு The Marine என்னும் படத்தில் அறிமுகமானார். அதன் பின் திரையுலகில் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. தற்போது Ferdinand என்னும் படத்தில் டப்பிங் மட்டும் கொடுத்திருக்கிறார்.
Nathan Jones:

WWE வில்லனான இவர் பெரிய அளவிற்கு புகழ் பெற்ற ஸ்டார் இல்லாவிட்டாலும் நம் தமிழ் சினிமாவில் நடித்த ஒரே ரஸ்லர் இவர்தான். இவர் நடித்த படம் பூலோகம். இவர் டோனி ஜா நடித்த படத்தில் அடியாளாக நடித்துள்ளார்.
Michael Shawn Hickenbottom

HBK என்றால் பலருக்கு உடனே தெரியும். HHH மற்றும் HBK இருவரும் ரஜினி கமல் போன்றவர்கள். இவர்கள் இல்லாத ரஸ்லிங்கை நினைத்து பார்க்கவே முடியாது. இவர் இந்த வருடம்தான் சினிமா உலகிற்குள் நுழைகிறார். இவரின் முதல் படம் The Resurrection Of Gavin Stone
David Bautista

சரியான ஹைட் அண்டு வெயிட்டில் ஒரு ரஸ்லர் என்றால் சட்டென நம் நினைவிற்கு வருவது படிஸ்டாதான். இவரது ஸ்மாக்கை யாராலும் மறக்க முடியாது. இவர் Relative Strangers என்னும் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் The Man With The Iron Fists, Spectre, Blade Runner 2049, Wrong Side Of Town (Rob Van Dam உடன் நடித்தது) போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர்களை போல மேலும் Kane, Steve Austin, Great Khali போன்ற பல ஸ்டார்கள் சினிமாவில் நடித்துள்ளனர்.