vijay-bhairava

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பைரவா படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்னொரு பக்கம் பைரவா படத்தின் வியாபார விஷயங்களும் சூடு பிடித்துள்ளன. பல ஏரியாக்களை பெரிய தொகைக்கு விற்றுவிட்டனர் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது.

தமிழக தியேட்டரிகல் ரைட்ஸை ஸ்ரீ கிரீன் புரடக்ஷன்ஸ் சரவணன் வாங்கி இருக்கிறார். பைரவா பிசினஸ் தொடர்பாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று தற்போது கசிந்திருக்கிறது… அதாவது தற்போது தமிழக ஏரியாக்களை பிரித்து விற்கும் வேலை நடைபெற்று வருகிறதாம்.

பைரவாவின் திருச்சி ஏரியாவை கிரீன் ஸ்கிரீன்ஸ் நிறுவனர் பி.கே.நாராயணசாமி என்பவர் பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளார். திருச்சி ஏரியாவில் ரஜினி நடித்த கபாலி படம்தான் அதிகவிலைக்கு விற்கப்பட்ட படம். தற்போது ரஜினியின் கபாலி படத்துக்கு அடுத்த படியாக விஜய்யின் பைரவா படம் பெரிய தொகைக்கு வியாபாரமாகியுள்ளதாம்.

விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பணபரிவர்த்தனைகள் அனைத்தையும் காசோலை மற்றும் டிடி வழியே செய்து வந்தது. கணக்கில் வராமல் ஒரு ரூபாய் கூட வாங்க மாட்டோம் என்று கறாராக அறிவித்தது. தற்போது 500,1000 ரூபாய்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததால் பல பட நிறுவனங்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்க, விஜயா புரடக்ஷன்ஸ் கூலாக இருக்கிறது.