CSK
ஐபில்

11 வது சீசன் களைகட்ட துவங்கிவிட்டது. இரண்டு வருடங்களுக்கு பிறகு பிரம்மாண்ட என்ட்ரி கொடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். சீசன் துவங்கும் முன்பே ஓபன் டாப் பஸ்ஸில் பயணம், வீரர்களின் ப்ராக்டிஸ் பார்க்க இலவச அனுமதி என அசத்தியது சென்னை அணி நிர்வாகம். முதல் போட்டியை மும்பையிலும், இரண்டாவது போட்டியை சென்னையிலும் ஆடி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது சென்னை அணி. அதே போல் மூன்றாவது போட்டியில் ஹட் ட்ரிக் அடிக்கும் என்று பார்த்த பொழுது துரதிருஷ்டவசமாக 4 ரன்களில் தோற்றது.

காவேரி மேலாண்மை குழு அமைக்க வேண்டும் என்பதால் சென்னையில் ஐபில் நடத்த கூடாது என்று பல தரப்பில் எதிர்ப்பும் போராட்டமும் நடந்தது. அதே போல் சென்னையில் நடந்த போட்டியில் ஷூ எறிந்தனர். எனவே எனவே கிரிக்கெட் ரசிகர்களின் பாதுகாப்பு மற்றும் வீரர்களின் நலன் கருதி போட்டிகளை றது செய்தது பிசிசிஐ. மேலும் சென்னை அணியின் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டது.

அதிகம் படித்தவை:  "நான் ரோபோ கிடையாது, எனக்கும் ரத்தம் வரும்." விராட் கோலி அதிரடி பேட்டி.
CSK

இந்நிலையில் சென்னை மற்றும் ராஜஸ்தான் மோதும் போட்டி நாளை புனேவில் நடக்கவுள்ளது. இந்த போட்டியை ரசிகர்கள் காண்பதற்கு தான் சிறப்பு ரயில் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் சிஎஸ்கே ரசிகர்களை புணேவுக்கு அனுப்பி வைத்துள்ளது அணி நிர்வாகம். இன்று காலை 8.30 மணிக்கு புனே நோக்கி ‘விசில் போடு எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் சிறப்பு ரயில் புறப்பட்டுள்ளது.

Whiste Podu Express

சிஎஸ்கே ஃபேன் கிளப் என்ற அமைப்பு சிஎஸ்கே நிர்வாகத்துக்கு கோரிக்கை ஒன்று வைத்தது. சென்னை ஆட்டங்கள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளதால், சலுகை விலையில் ரயில் அல்லது விமான டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்து தாருங்கள் அல்லது ஆட்டத்துக்கான டிக்கெட் கட்டணத்தை ஏற்றுக்கொள்ளுமாறும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

அதிகம் படித்தவை:  காரை விட விலை உயர்ந்த காஸ்ட்லி கார் சாவிகள்.
CSK

இதனை பரிசீலனை செய்த சென்னை அணி நிர்வாகம் ஸ்பெஷல் ற்றின் ஒன்றையே ரசிகர்களுக்காக ஏற்பாடு செய்துள்ளது. மேலும் ற்றின் நாளை விடியற்காலை புனே சென்றதும் அங்கு தங்குவதற்கும், அவர்களின் உணவுக்கும் ஏற்பாடு செய்துள்ளது. போட்டி முடிந்ததும் இரவு அதே ரயிலில் ரிட்டர்ன் ஆகிறார்கள்  அனைவரும்.

CSK
CSK

முதல் முறையாக முதல் போட்டிக்கும் மட்டும் இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாகவும், இதனை செயல்படுத்தி பின் ஆராய்ந்து மற்ற போட்டிகள் குறித்து முடிவு செய்யப்போவதாகவும் சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.