கிரவுண்டில் பெரிய ஆக்ரோஷ அதிரடி வீரர் என்பதை காட்டிலும், வீட்டில் மிகவும் அன்பான, கனிவான கணவன் என்பது தான் ஒரு ஆண் மகனுக்கு பெருமை. இந்தியாவின், கிரிக்கெட்டும் பிரிக்க முடியாத ஒன்று. மட்டை பிடித்து ஆடியதை காட்டிலும், இல்லறத்தில் விக்கெட் விழுகாமல் சந்தோசமான இல்வாழ்க்கை நடத்தி வரும் அழகான தம்பதிகள் இவர்கள்.

இவர்களில் உங்களுக்கு பெஸ்ட்டாக தோன்றும் தம்பதி யாருன்னு நீங்களே சொல்லுங்கள்

சச்சின் – அஞ்சலி :


கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் சச்சின்-ன் மனைவி அஞ்சலி ஒரு மருத்துவர். இவரை காட்டிலும் வயதிலும் மூத்தவர். இவர்களுக்கு திருமணமாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இவர்களுக்கு சாரா, அர்ஜுன் என இரண்டு குழந்தைகள். அஞ்சலி குஜராத் தொழிலதிபர் ஆனந்த் மேத்தாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி – சாக்ஷி : 


கியூட்டான ஜோடி. மிஸ்டர் கேப்டன் கூலை எப்போதும் சில்லென்று வைத்திருப்பவர். அழகான காதல் கதை கொண்டவர்கள். திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகியுள்ளன. இவர்களுக்கு ஸாரா என்ற பெண் குழந்தை இருக்கிறார்.

அதிகம் படித்தவை:  டிஆர்பியில் ‘பைரவா’வை பின்னுக்கு தள்ளிய ‘பிச்சைக்காரன்’!

ஷிகர் தவான் – ஆயிஷா :


ஷிகர் தவானை விட ஆயிஷா 12 ஆண்டுகள் வயதில் மூத்தவர். ஆயிஷா மெல்பேர்னை சேர்ந்தவர். குத்துச்சண்டை அறிந்தவர். இவர்களுக்கு திருமணமாகி ஐந்தாண்டுகள் முடிவடைந்துள்ளது. இவர்களுக்கு சாரோவர் எனும் ஆண் குழந்தை இருக்கிறார்.

சுரேஷ் ரெய்னா – பிரியங்கா : 


இவர்கள் இருவரும் குழந்தை பருவத்தில் இருந்தே நண்பர்கள். சுரேஷ் தாய் மூலமாக தான் இவர்களது திருமண பேச்சு துவங்கியது. பிரியங்கா நெதர்லாந்தில் ஐ.டி துறையில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு திருமணமாகி இரண்டாண்டுகள் ஆயின. இந்த ஜோடிக்கு கிரேசியா ரெய்னா என்ற பெண் குழந்தை இருக்கிறார்.

வினோத் காம்ப்ளி – ஆண்ட்ரியா : 


ஆண்ட்ரியா வினோத்தின் இரண்டாவது மனைவி. இவர் ஒரு ஃபேஷன் மாடல். 2010ல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவரது பெயர் ஜீசஸ் கிறிஸ்டினோ.

ரோஹித் ஷர்மா – ரித்திகா : 


ஆறு வருடங்களாக ரோஹித் சர்மாவிடம் மேலாளராக பணியாற்றியவர் ரித்திகா. இருவரும் காதலில் விழவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துக் கொண்டனர்.

அதிகம் படித்தவை:  பா.ரஞ்சித் தயாரிப்பில் கதிர் – ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ பட மேக்கிங் வீடியோ !

ஹர்பஜன் சிங் – கீதா : 


திருமணமாகும் வரை மீடியாவிற்கு தெரியாமலே காதலித்து வந்தார்கள். கீதா மாடலிங்கில் இருந்து நடிக்க வந்தவர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகப்போகிறது.

யுவராஜ் சிங் – ஹாசெல் : 


பாலிவுட் நடிகை ஹாசெலை காதலித்து வந்தார் யுவராஜ். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ நிச்சயம் செய்து திருமணம் செய்துக் கொண்டனர்.கவுதம் காம்பீர் – நடாஷா : 


இவர்கள் இருவரும் குடும்ப நண்பர்கள். கடந்த 2011 இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது.

அஸ்வின் – ப்ரீத்தி : 


சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். 2011-ல் திருமணம் செய்துக் கொண்டனர். தன் குடும்பத்தை பெரிதாக மீடியா வெளிச்சம் படாமல் பார்த்துக் கொள்கிறார் அஸ்வின்.