செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

ராணுவ வீரர்களின் பயோபிக்.. அமரன், மேஜர், ஷெர்ஷா ஆகிய 3 படங்களில் எது பெஸ்ட்?

ராணுவ வீரர்களின் பயோபிக் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவை என்னென்ன படங்கள் என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

ராணுவ வீரர்களி பயோபிக்

ஒரு நாடு எந்த சூழலிலும் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த நாட்டின் அரசும், அங்கு வசிக்கும் கோடிக்கணக்கான மக்களும் எந்த வித நெருக்கடியும் இன்றி வாழ முடியும். அண்டை நாடுகளின் எல்லை மீறுதல், அச்சுறுத்தல், தீவிரவாத தாக்குதல், இதெல்லாவற்றில் இருந்து மக்களையும் ஒட்டுமொத்த நாட்டையும் கண் அசராமல் பாதுகாத்து வருவது ராணுவ வீரர்கள்.

உலகின் பல நாடுகளிலும் ராணுவத்திற்கு அதிகளவில் தொகை செலவிடப்படுகிறது. அதன்படி, ராணுவத்திற்கு அதிகளவில் செலவிடப்படும் நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை அடுத்து, இந்தியா உள்ளது. நம் தேசத்தை இரவும் பகலும் கண் விழித்துக் காப்பாற்றி வரும் ராணுவ வீரர்கள் மீது அரசுக்கும், மக்களுக்கும் எப்போதும் அதிக மரியாதை உண்டு.

அந்த வகையில் தேசத்தைப் பாதுகாக்கு பணியின் போது, எதிரிகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்கும் போது, தீவிரவாதிகளுடனான சண்டையின் போது வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் தேதி நம் நாட்டில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இப்படி, தேசத்திற்காக போராடி தன் இன்னுயிரை ஈந்த ராணுவ வீரர்களைப் பற்றி அவர்களின் வாழ்க்கை போராட்ட களம் ஆகியவற்றைப் பற்றி வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள் நாடகம், சினிமாக்கள், டாக்குமெண்ட்ரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேஜர் சந்தீப் உன்னி கிருஷ்ணன்மேஜர்

அதன்படி, பெங்களூரில் வசித்த கேரளாவைச் சேர்ந்த மேஜர் சந்தீப் உன்னி கிருஷ்ணன் கடந்த 2008 ஆம் ஆண்டு 100 ஆண்டிகள் பழமையான மும்பையின் தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகளால் பணயக் கைதிகஆலக பிடித்து வைக்கப்பட்ட மக்களை மீட்க அமைக்கப்பட்ட 51 ஏஸ் ஏஜி குழு தளபதி ஆவார். இதில், அதிரடியாக செயல்பட்டு தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய அவர் முதுகில் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார்.

26/11 மும்பை தாக்குதலின் போது தீவிரவாதிகளின் திட்டங்களை முறியடித்து, மக்களை காப்பாற்றிய மேஜர் சந்தீப் உன்னி கிருஷ்ணனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான படம் மேஜர். இப்படத்தை சசி கிரண் திக்கா இயக்கினார். ஆத்வி சேஸ், பிரகாஷ் ராஜ், ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர். சோனி பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்தது. ரூ.32 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.66 கோடி வசூலித்தது.

கேப்டன் விக்ரம் பத்ரா – ஷெர்ஷா

இந்திய ராணுவத்தில் முக்கிய நபராக கருதப்படுவர் விக்ரம் பத்ரா. இவர் நான் இந்திய கொடியை ஏற்றிவிட்டுத்தான் வருவேன் என்று கூறியவர். கடந்த 1999 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி கார்கில் போரின்போது, லெப்டினண்ட் விக்ரம் பத்ராவின் தலைமையிலான குழு 5140 புள்ளிகள் பெற்றது. இதனால் அவர் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார், ஜுலை 7 ஆம் தேதி எதிரிகளுடன் போரிடும்போது, துப்பாக்கிக் குண்டுகள் மார்பில் பாய்ந்து விக்ரம் பத்ரா வீரமரணம் அடைந்தார். அவருக்கு ராணுவத்தின் உயரிய விருதான பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

கேப்டன் விக்ரம் பத்ராவின் வீரமிகு வாழ்க்கை வரலாற்றுப் படமாக ஷெர்ஷா உருவானது. இதில், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி ஆகியோர் நடித்திருந்தனர். தர்மா புரடக்சன் இந்தியில் தயாரிக்க, இப்படத்தை பில்லா படத்தை இயக்கிய விஷ்ணு வர்தன் இயக்கினார். கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்றினால் தியேட்டரில் வெளியாகாமல், ஓடிடியில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியானது. இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.

மேஜர் முகுந்த் வரதராஜன்- அமரன்

தமிழ் நாட்டில் இருந்து அசோக் சக்ரா விருது பெற்ற நான்கு பேரில் ஒருவராக அறியப்படுபவர் மேஜர் முகுந்த் வரதராஜன். இவர் இந்திய ராணுவத்தின் ரஷ்டிரிய ரைப்பிள்சின் 44 வது பிரிவில் பணியாற்றுயபோது, கடந்த 2014 ஆம் ஆண்டு, தீவிரவாதிகளுடனான மோதலில் தன் இன்னுயிரை ஈந்து வீரமரணம் அடைந்தார்.

இவரது வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து படமாக எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிவகார்த்திகேயந் சாய்பல்லவி நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயகக்த்தில் கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான படம் அமரன் ஜிவி.பிரகாஷ் இசையில் உருவான இப்படத்தை 200 கோடி பட்ஜெட்டில் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர் நேசனல் தயாரித்துள்ளது.

இப்படம் 1000 முதல் 1200 தியேட்டர்களில் ரிலீசான நிலையில், உலகம் முழுவதும் முதல் நாளில் ரு.42.2 கோடிகள் வசூலித்தது. இதையடுத்து தற்ஒது வரை இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், முதல் 3 நாட்களில் இப்படம் ரூ.95 கோடியில் இருந்து 100 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

எனவே ராணுவ வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுத்த படங்கள் ரசிகர்களிடம் நலல் வரவேற்பை பெற்று வருவதாகவும், அதிலும், அமரன், மேஜர், ஷெர்ஷா ஆகிய 3 படங்களுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த படங்கள் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News