சென்னை: கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் திரையுலக பிரபலங்கள் விடுமுறையை கழிக்க எங்கு சென்றுள்ளார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். இந்த கோடை காலம் துவங்கியதில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. கத்திரி வெயில் காலம் நாளை தான் துவங்குகிறது. ஆனால் பல இடங்களில் வெயில் ஏற்கனவே சென்ச்சுரி அடித்துள்ளது. வெயில் காலம் வந்தால் திரையுலக பிரபலங்கள் விடுமுறையை கழிக்க எங்காவது செல்வார்கள். இந்த ஆண்டு எந்தெந்த பிரபலங்கள் எங்கு சென்றுள்ளார்கள் என்று பார்க்கலாம்.

சூர்யா, ஜோதிகாசூர்யா, ஜோதிகா

ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சூர்யா, ஜோதிகா வெளிநாடு செல்வது வழக்கம். இந்த ஆண்டு அவர்கள் ஐரோப்பாவுக்கு கிளம்பிச் சென்றுள்ளனர்.

த்ரிஷாத்ரிஷா

த்ரிஷா அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வருகிறார். முதலில் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார். நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

ராய் லட்சுமிராய் லட்சுமி

ராய் லட்சுமியும் த்ரிஷாவை போன்றே அமெரிக்காவில் தான் கோடையை கழித்து வருகிறார். நியூயார்க் நகரில் தங்கிவிட்டு மயாமிக்கு சென்று கடற்கரையோரம் அமர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

டாப்ஸிடாப்ஸி

பாலிவுட்டில் பிசியாக இருக்கும் டாப்ஸி தனது சகோதரி, தோழிகளுடன் தாய்லாந்தில் உள்ள கோ சமூய் தீவுக்கு சென்றார். அங்கிருந்து லண்டனுக்கு சென்றுள்ளார்.

ராகுல் ப்ரீத் சிங்ராகுல் ப்ரீத் சிங்

நடிகை ராகுல் ப்ரீத் சிங் இமய மலை செல்ல திட்டமிட்டுள்ளார். கடந்த ஆண்டு நான் வெறும் 3 நாட்கள் தான் பிரேக் எடுத்தேன். இந்த ஆண்டு 15 நாட்கள் பிரேக் எடுக்க உள்ளேன். இமய மலையில் உள்ள ஸ்பா அருமையாக இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். அங்கு செல்ல உள்ளேன் என்றார்.

அஜீத், விஜய்அஜீத், விஜய்

அஜீத்தும், விஜய்யும் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் குடும்பத்துடன் எங்கும் செல்லவில்லை. இருவருமே அவரவர் படப்பிடிப்பில் பிசியாக உள்ளனர்.