Ethirneechal Serial: இது என்னடா எதிர்நீச்சலுக்கு வந்த சோதனை என்பதற்கு ஏற்ப நாடகம் ஒவ்வொரு நாளும் சிக்கி சீரழிந்து சின்னா பின்னமாக வருகிறது. இந்த நாடகத்தை பார்த்தால் எங்களுடைய ரத்த கொதிப்பு மற்றும் பிபி எல்லாம் எகிறிது. தயவு செய்து நாடகத்தின் கதையை மாற்றுங்கள் அல்லது இதை முடித்து விடுங்கள் என்று மக்கள் கமெண்ட்ஸ் மூலம் ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த அளவிற்கு இந்த நாடகம் தரைமட்டமாகி போய்விட்டது. ஒரு நேரத்தில் இந்த நாடகத்தை பார்ப்பதற்கு குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் எல்லா வேலையும் முடித்துவிட்டு ஒட்டுமொத்தமாக பார்த்து நேரத்தை செலவழிக்கும் விதமாக இருந்தது.
ஆனால் தற்போது இந்த நாடகத்தை ஏன் டிவியில் போட்டு எல்லாருடைய உசுரையும் வாங்குகிறீர்கள் என்று தினம் தினம் திட்டும் அளவிற்கு கொடுமையாக போகிறது. அந்த வகையில் இதற்கு முடிவே இல்லையா என்று மக்கள் கொந்தளித்து வருகிறார்கள்.
கதையை தரைமட்டமாக இழுத்தடிக்கும் எதிர்நீச்சல் டீம்
ஒரு பக்கம் ஜீவானந்தத்திற்கு என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. இன்னொரு பக்கம் தர்ஷினி கல்யாண பேச்சு, இதை கேள்விப்பட்டு மற்றவர்கள் சோளக்காட்டு பொம்மையாக வேடிக்கை பார்த்து வருகிறார்கள். போதாக்குறைக்கு குணசேகரன் வானத்துக்கும் பூமிக்கும் ஓவராக குதித்து ஆட்டம் போட்டு வருகிறார்.
அதிலும் அவர் பேசும் விதத்தை பார்க்கும் பொழுது எரிச்சலாக வருகிறது என்று கமெண்ட்ஸ் மூலம் மக்கள் ஆதங்கத்தை தெரிவித்தும், ஏன் இப்படி நாடகத்தை கொண்டு வருகிறார்கள் என்று தெரியவில்லை. முக்கியமாக இந்த நாடகத்தின் வசனகர்த்தா ஸ்ரீவித்யா கொடுத்த ஒவ்வொரு டயலாக்கும் அல்டிமேட் ஆக இருந்தது என்று விருது வாங்கி இருந்தார்.
அவர் எல்லாம் இப்பொழுது எங்கே இருக்கிறார் என்று தெரியாத அளவிற்கு தற்போது பேசும் டயலாக்கை கேட்க முடியாத அளவிற்கு மட்டமாக இருக்கிறது. எப்பொழுது குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து இல்லையோ, அப்பொழுதே இந்த நாடகம் கெட்டு குட்டிச்சுவர் ஆகிவிட்டது என்றே மக்கள் சொல்லி வருகிறார்கள்.
தயவு செய்து இனியாவது ஒவ்வொரு பிரச்சனைக்கும் உடனே ஒரு முடிவு காணும் வகையில் அந்த வீட்டில் உள்ள பெண்களை துணிச்சலோடு கொண்டு வாருங்கள். அத்துடன் பெண்களின் முன்னேற்றத்தை காட்டும் விதமாக அமைந்த கதை எங்கே போச்சு, அதை வைத்து கதை நகர்த்துங்கள் என்று ஒவ்வொரு நாளும் ஏக்கத்துடன் மக்கள் பார்த்துக் கொண்டு வருகிறார்கள்.
அவர்களின் நம்பிக்கையை வீணடிக்கும் வகையில் இல்லாமல் கதையின் டிராக்கை மாத்தி கொஞ்சம் லாஜிக் உடன் கொண்டு வாருங்கள். இல்லை என்றால் கூடிய விரைவில் இந்த நாடகத்திற்கு ஒரு எண்டு கார்டு போட்டு விடுங்கள். அதிலும் இப்பொழுது குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் வேலராமமூர்த்தி நடிப்பு பாராட்டக்கூடியதாக இருந்தாலும் கதைப்படி அவரை பார்த்தாலே எரிச்சலாக இருக்கிறது. மேலும் இப்பொழுது இந்த நாடகத்திற்கு எதிர்நீச்சல் என்ற டைட்டிலுக்கு பதிலாக மக்கள் எரிச்சல் நீச்சல் என்று வைத்திருக்கிறார்கள்.