dhanush-vetrimaranபொல்லாதவன், ஆடுகளம் படங்களை தொடர்ந்து தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து சூதாடி எனும் படத்தில் பணியாற்ற முடிவு செய்தனர். ஆனால் இதற்கிடையில் ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்ததும் இந்த படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு பாலிவுட்டுக்கு சென்றார் தனுஷ்.

எனவே உடனடியாக விசாரணை படத்தை தொடங்கிய வெற்றிமாறன், அதை முடித்துவிட்டு மீண்டும் தனுஷுடன் இணைந்து படம் பண்ணலாம் என திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது மீண்டும் வெற்றிமாறனுக்கு தனுஷின் கால்ஷீட் கிடைக்கவில்லையாம். எனவே தற்போது மீண்டும் விசாரணை போன்று இரு சிறிய படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் வெற்றிமாறன்