Connect with us
Cinemapettai

Cinemapettai

இடி இடிக்கும்போது, அர்ஜுனா..அர்ஜுனா என்று சத்தமாகச் கூறவது எதற்க்காக தெரியுமா…

Rainfall-Tamilnadu-Start-June1st-Week

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இடி இடிக்கும்போது, அர்ஜுனா..அர்ஜுனா என்று சத்தமாகச் கூறவது எதற்க்காக தெரியுமா…

முன்னோர்கள் சொல்லியிருக்கும் ஆன்மிக அறிவுரை ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஆயிரம் ஆண்டு கால அனுபவம் மட்டுமல்ல அறிவியலும் கலந்திருக்கிறது. அவற்றை ஆராய்ந்து பார்த்தால், நம் முன்னோர்களின் மதிநுட்பம் உங்களை வியக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதை நிரூபிக்க கீழே உள்ள சில உதாரணங்களே சான்றே போதும்.

வீட்டில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்ட வேண்டும்…

மங்களகரமான விசேஷ நாட்களில் கூடும் மக்கள் கூட்டங்களில் வெளிப்படும் மூச்சுக்காற்றில் கார்பன் -டை- ஆக்ஸைடு (கரியமில வாயு) வியர்வை நெடி அதிகமாக இருக்கும். இதனால் கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. மாசுபட்ட காற்றைத் தூய்மைப்படுத்தி, ஆக்சிஜன் (பிராணவாயு) நிரம்பிய நல்ல காற்றாக மாற்றி வழங்குபவை தான் வாழை மரமும், மாவிலையும்.இதனால் தான், வீட்டில் வாழை மரம் விசேஷ நாட்களில் கட்டும் வழக்கத்தை கொண்டு வந்தனர் நம் முன்னோர்கள்.

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ,விரதம் முடிக்கும்போது அகத்திக் கீரை சாப்பிட வேண்டும்…

பொதுவாக, மாதத்துக்கு ஒருமுறையாவது, மென்று விழுங்கும் திட ஆகாரங்களை உட்கொள்ளாமல் இருந்து, இரைப்பைக்கும் குடலுக்கும் குறைவான வேலை கொடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது.இதே நேரம், திட உணவை உட்கொள்ளாமல் இருப்பதால், சிலருக்கு வயிற்றில் இருக்கும் அமிலங்களால் பாதிப்பு ஏற்பட்டு, புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனைத் தடுக்க அகத்திக்கீரை அருமருந்து.எனவேதான், ஏகாதசி விரதம் முடிக்கையில் அகத்திக்கீரையைச் சாப்பிடச் வேண்டும்.
இது தவிர, அகத்திக்கீரையில் இரும்புச் சத்து அதிகம். விரதம் இருந்து களைத்துப் போன உடலுக்கு அது புத்துணர்வு கொடுக்கும்..

வெள்ளி, செவ்வாய் வீடு முழுக்கச் சாம்பிராணிப் புகை போடவேண்டும்…

பொதுவாக வீட்டில் உற்பத்தியாகும் பூச்சித்தொல்லை, கொசுத் தொல்லை நீங்க நாம் செய்யும் இயற்கையான வழிமுறையே இது.
சாம்பிராணி மணம் பல்வேறு விதமான பூச்சிகளையும், கொசுக்களையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது.

வாசலில் உள்ள நிலைப்படியில் மஞ்சள் தடவ வேண்டும்..மஞ்சள் மிக நல்ல கிருமிநாசினி. வெளியில் வெவ்வேறு கிருமிகள் உள்ள இடங்களுக்குச் சென்று திரும்பும் நம் கால்கள் முதலில் மிதிப்பது, நம் வாசல் நிலைப்படியைத்தான்.அங்கு மஞ்சள் தடவப்பட்டிருந்தால், அது கிருமிகளை உள்ளே வரவிடாமல் தடுத்து, நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க வழிவகுக்கும்.

இடி இடிக்கும்போது, அர்ஜுனா..அர்ஜுனா என்று சத்தமாகச் கூறவது…

இடிச் சத்தம் பலமாக ஒலிக்கும்போது அது செவிப்பறையைத் தாக்கிக் கிழிக்கும் அபாயம் உண்டு.அர்ஜுனா என்று கத்தும்போது வாய் அகலமாகத் திறப்பதால், ஒலியானது இரண்டு பக்கமாகவும் சென்று, செவிப்பறை கிழிவது, காது அடைத்துக்கொள்வது போன்ற பிரச்சினைகளிலிருந்து நம்மைக் பாதுகாத்துவிடுகின்றது.

நகத்தைக் கடித்தால் தரித்திரம்..

நகத்தைக் கடிக்கும்போது, நகத்தின் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் வயிற்றுக்குச் சென்று நோய்களை உருவாக்கும்.நகத் துணுக்குகளை விழுங்கி, அதனால் உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.அதனால்தான், நகம் கடிப்பதைத் தரித்திரம் என்றார்கள் பெரியோர்கள்.

உச்சி வெயிலில் கிணற்றை எட்டிப் பார்க்கக் கூடாது..

உச்சிவெயில் படும் நேரங்களில், சூரியஒளி நேரடியாக கிணற்றில் விழுகிறது. இதனால், திடீரென வேதிவினை நடைபெற்று, கிணற்றுக்குள் விஷவாயு உண்டாகலாம்.அத்தருணம், கிணற்றில் எட்டிப் பார்ப்பதால், மயக்கம் உண்டாகும். இதன் காரணமாக கிணற்றுக்குள் விழ வாய்ப்புண்டு.வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது…

நம் புவியின் மையப்பகுதியில் இருக்கும் காந்தவிசையானது வடக்கு – தெற்காகத்தான் இயங்குகிறது.

எனவே, வடதிசையில் தலை வைத்துப் படுக்கும்போது, காந்தவிசையால் நமது மூளையின் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளது.கோயிலை விட, உயரமாக வீடு கட்டக் கூடாது..பலத்த இடி இடிக்கும் கோயில் கோபுரங்களின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் கலசங்கள், அந்த மின் அதிர்ச்சியை உள்வாங்கி, தரைக்குக் கடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.இதனால், அந்தக் கோபுரத்துக்கோ சுற்றிலும் உள்ள வீடுகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது.எனவேதான், இன்றைய இடிதாங்கி அறிவியல் வசதி இல்லாத அக்காலத்தில், கோயிலை விட உயரமாகக் கட்டடம் கட்டவேண்டாம் என்று சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top