Tamil Nadu | தமிழ் நாடு
கொரோனா வைரஸ் தாக்குதல் எப்பதான் முடியும்.. 8 மாதத்திற்கு முன்பே துல்லியமாக கணித்த ஜோதிடர்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அழிவை ஏற்படுத்தும் என்று ஒரு ஜோதிடர் எட்டு மாதத்திற்கு முன்பே கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனை நம் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் சமூகவலைத்தள பக்கத்தில் பதிந்துள்ளார்.
ஜோதிடர் அபிக்யா ஆனந்த் என்ற 14 வயது சிறுவன் எட்டு மாதத்திற்கு முன்பு அவருடைய யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் 2019 நவம்பர் முதல் 2020 ஏப்ரல் மாதம் வரை உலகையே ஆட்டிப் படைக்கக் கூடிய ஒரு கொடூரமான வைரஸ் தாக்கி பலர் பலி ஆவார்கள் என்றும், மேலும் கிரகங்கள் குறித்தும் பல செய்திகளை அவர் யூடியூப் சேனலில் கூறினார்.
அவர் சொன்னது போலவே 2019 நவம்பர் முதல் கொரோனா வைரஸ் சைனாவிலிருந்து ஆரம்பித்து உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒரு ஆறுதல் செய்தியாக வரும் ஏப்ரல் மாதம் இந்த கொரோனா வைரஸ் பிரச்சினை முடிவடையும் என்று கூறியிருக்கிறார்.
அதிக பட்சம் மே இறுதிக்குள் கண்டிப்பாக இந்த பிரச்சனை முடியும் என்று கூறினார். அவ்வாறு அவர் கூறியது போல் முடிந்தால் பெரும் நிம்மதி ஏற்படும். அதே நேரத்தில் அவருடைய பெயரும் உலகம் முழுவதும் பிரபலம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
