நம்ம நயன் பற்றி  என்ன செய்தி வந்தாலும் அது வைரல். நயன் நடந்தால் ஊர்வலம், நின்றால் பொதுக்கூட்டம். நயன் நின்று திரும்பிப்பார்த்தால் அது பேரணி..! இப்படி ஒரு மாஸ் நயனுக்கு.

நயனின் வயது முப்பதைத் தாண்டி விட்டது. ஆனாலும் நயன் தான் இன்று இந்தியாவின் டாப் நடிகை. எல்லாம் சரி. அவர் என்ன பந்தாக் காட்டினாலும், என்ன பவிசு பண்ணினாலும் தமிழர்கள் நாம் பொறுத்துக் கொள்வோம்.

ஆனால் ஆந்திரா வாலாக்கள் கொஞ்சம் காரம் உள்ள பார்ட்டிகள். அதிலும் அவர்கள் கடவுளாக நேசிக்கும் சூப்பர்ஸ்டார்களை  யாரவது புண் படுத்தி விட்டால் அதற்காக ஜெகத்தினை அழிக்கக் கூட தயங்க மாட்டார்கள்.

ஆந்திரா மெகா ஸ்டார். சிரஞ்சீவி நடித்த 150 வது படத்திற்கு நயன் தான் கதாநாயகி. ஆனால் இவர் கேட்ட சம்பளம் மூன்று கோடி.  தயாரிப்பாளர் மயங்கி விழுந்தார்.

ஆனாலும் மெகா ஸ்டார் கேட்டுக் கொண்டதால் மூன்று கோடியை மூக்கால் அழுதபடி கொடுத்தார்கள்.

பிகினி உடையில் நடிக்க கேட்ட போது அதற்கு தனி ரேட். இந்த விஷயங்கள் வெளியான போதே மெகாஸ்டார் ரசிகர்கள் கொந்தளித்தார்கள்.

அதைவிட படத்தின் டைட்டிலில் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்று பெயர் போட வேண்டும் என்று நயனின் மேனேஜர் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு படத்தின் இயக்குனர் விநாயக் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விஷயம் ஆந்திரா எங்கும் கடும் புயல், பூகம்பம், சுனாமி போன்றவற்றை மொத்தமாகக் கூட்டி வந்து தொலைத்தது. அவ்வளவு தான்.

மெகா ஸ்டார் ரசிகர்கள் நயன் தாராவை கடுமையாக எச்சரித்து வலைத்தளங்களில் போர் புரிய ஆரம்பித்தார்கள். காலை வெட்டுவோம், கையை உடைப்போம் என்றெல்லாம் மிரட்ட சிரஞ்சீவி ரசிகர்களை கூல் செய்தாராம்.

ஆந்திராவில் சூப்பர்ஸ்டார் என்றால் அது இன்னும் நானூறு வருடங்களுக்கு சிரஞ்சீவி தானாமாம்..!