விக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வெளியான படம் 24. மாபெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழகத்தில் 22 கோடி வசூல் செய்து சுமாரான வெற்றியையும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் சூப்பர்ஹிட் அந்தஸ்தையும் பெற்றிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

அதிகம் படித்தவை:  24 படத்தின் இரண்டு நாட்களில் பிரம்மாண்ட வசூல் வெளியானது !

இப்படத்தில் சூர்யா ஆத்ரேயா எனும் கதாபாத்திரத்தில் பாதி படத்துக்கு மேல் வீல் சேரில் உட்கார்ந்து நடித்தபடியே அசத்தியிருப்பார். படம் வெற்றிபெற்ற பின் தற்போது இந்த வீல்சேர் The Spinal Foundation என்ற அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஒரு மாற்றுத்திறனாளிக்கு இந்த வீல்சேர் பயன்படுத்த அனுமதிக்கப்படுமாம்.