பீட்டா வாடிகையாளர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது

பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸ் அப் நிறுவனம் கடைசியாக வெளியிட்ட பீட்டா பதிப்பில் பிழை இருப்பதாகவும் , அதனால் பீட்டா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை பயன்படுத்த வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

தற்போது வாட்ஸ் அப் சோதனைக்காக சில மாற்றங்களை ஏற்படுத்தி புதிய பதிப்பு பீட்டா பதிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த பதிப்பினை தரவிறக்கம் செய்த பயனாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பெறுவதில் சிக்கல் ஏற்படும். எனவே வாட்ஸ் அப் பீட்டா 2.17.140 பதிப்பானது இன்னும் முழுமை பெறவில்லை.மேலும், சரியாக முழுமை பெறாத இந்த பீட்டா பதிப்பினை பயன்படுத்த வேண்டாம் என வாட்ஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.