fbpx
Connect with us

வாட்ஸ் அப் பயனாளர்களை மகிழ வைக்க வரும் புது வசதி

whatsapp updates

News | செய்திகள்

வாட்ஸ் அப் பயனாளர்களை மகிழ வைக்க வரும் புது வசதி

இணையம் மூலம் குறுஞ்செய்தி, புகைப்படம், வீடியோ, மற்றும் இதர கோப்புகளை பரிமாறிக்கொள்ள வந்த செயலிதான் வாட்ஸ் அப்.

இணையம் மூலம் கால் செய்யும் வசதியும் கொண்டதனால் மிக அதிக அளவிலான பயனாளர்களை சம்பாதித்த இந்த நிறுவனத்தை முக நூல் நிறுவனம் விலைக்கு வாங்கியது அனைவரும் அறிந்ததே. பயனாளர்களின் வசதிக்காக அடிக்கடி வாட்ஸ் அப் தனது வசதிகளை மேம்படுத்திக் கொண்டே வருகிறது.

அதுபோல் தற்போது அது அறிமுகம் செய்ய உள்ள புது வசதிதான் மெசேஜ் ரீகால். இந்த வசதி மூலம் நீங்கள் அனுப்பிய செய்தியை உங்கள் நண்பர் படிப்பதர்க்குள் அதனை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் தவறுதலாக மாற்றி அனுப்பப்பட்ட செய்திகளை மற்றவர்கள் படிப்பதற்குள் அதனை அழித்துவிட முடியும்.

மேலும் இந்த ரீகால் வசதியை சில நிமிடங்களுக்குள் நீங்கள் செய்து விட வேண்டும் இல்லையேல் அந்த செய்தியை உங்களால் திரும்ப பெற இயலாது.

இது பயனாளர்கள் பலருக்கும் உபயோகமுள்ள வசதியாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: யப்பா இனி லவர்க்கு அனுப்ப வேண்டிய மெசேஜெய் மத்தவங்களுக்கு அனுப்புற பயமில்லை, உடனே ரீகால் பண்ணிரலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top