fbpx
Connect with us

வாட்ஸ் அப்பில் வரும் புதிய பிரச்சினை.. ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்

whatsapp-issues

India | இந்தியா

வாட்ஸ் அப்பில் வரும் புதிய பிரச்சினை.. ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகின் முக்கிய இணைய பாதுகாப்பு நிறுவனமான செக்பாயிண்ட் என்ற இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் வாட்ஸ் அப்பில் புதிய பிரச்சினைகள் வரபோகிறது என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

உலகில் செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 150 கோடிக்கு மேல் ஆகும் இந்த நிலையில் வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பும் தகவல்களை இடையில் மறித்து அவற்றை படித்து வேறுவிதமாக மாற்றி அனுப்பவும் ஹேக்கர்களால் முடியும் என செக்பாயிண்ட் என்ற நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அதாவது வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பும் செய்தி மூன்றாவது நபரால் இடைமறித்து பார்க்கப்பட்டு அந்த செய்தியினை மாற்றி அமைத்து அவர்கள் அனுப்பும் முடியும் என்று அதனால் பல பிரச்சனைகள் வரும் என்றும், இதே மாதிரி தவறான செய்திகளை சித்தரித்து நம்முடைய ஐடி யில் இருந்த மற்றொரு ஐடிக்கு அனுப்ப முடியும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுமாதிரி செய்கையில் மூன்று விதமான பிரச்சனைகளை ஏற்படுத்த முடியும். அதாவது,

1) குரூப் சாட்களில் quote என்ற ஆப்ஷன்களை பயன்படுத்தி தகவல்அனுப்புவரின் அடையாளத்தை மாற்ற முடியும்.

2) ஒரு செய்திக்கு பதில் அனுப்பும் பொழுது அதை இடைமறித்து, தனிப்பட்ட சாட்டில் இருப்பதை குரூப்பில் தெரியும் படி வைக்க முடியும். இதனால் பல விபரீத விளைவுகளை ஏற்படுத்த முடியும்.

3) குரூப் சாட்டில் தனிப்பட்ட முறையில் செய்யப்படும் தகவல் பரிமாற்றத்தை எளிதாக மாற்றி போலியான தகவல்களை பரப்ப முடியும் என்று செக்பாயிண்ட் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top