whatsapp_CinemaPettai
whatsapp

வாட்ஸ் ஆப் தற்போது தனது வாடிக்கையாளருக்கு ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக்கில் உள்ளது போல், “பின் டூ டாப்” ஆப்ஷன் வாட்ஸ் ஆப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சில நேரங்களில், வாட்ஸ் ஆப்பில் நாம் தேடும், முக்கிய மெசெஜ்களையோ, குழுக்களையோ கண்டுப்பிடிப்பது கடினமாக இருக்கும், காரணம் நாம் தொடர்புக்கொள்ள நினைக்கும் நண்பரின் எண் அல்லது மெசெஜ் புதிய மெசெஜ்கள்  வரும் போது கீழே போய் விடும் அதனால், அதை உடனே எடுப்பதில் சிரமமாகிறது.

இதனை, சுலபமாக்க வாட்ஸ் ஆப் இந்த “பின் டூ டாப்” ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நமக்கு தேவையான மூன்று முக்கிய நபர்களின் பெயரையோ அல்லது குழுக்களின் பெயரையோ நாம் முதல் மூன்று இடங்களில் பின் செய்துக்கொள்ளலாம்.

அதிகம் படித்தவை:  காலா டைட்டிலில் இதை கவனித்தீர்களா, இதெல்லாம் என்ன குறியீடு தெரியுமா?

தற்போது இந்த வசதி ஆண்ட்ராய்டு போன்களில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அது iOS உட்பட மற்ற தளங்களிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதிகம் படித்தவை:  நயன்தாரா இப்படிப்பட்ட காட்சியில் நடிக்கலாமா? ரசிகர்கள் வருத்தம்

மேலும், தற்போது வாட்ஸ் ஆப் மூலம் ஒரே நேரத்தில் பல தொடர்பு விவரங்களை பகிரும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்பு, ஒரு சமயத்தில், ஒரு தொடர்பு எண் மட்டும் தான் பகிர முடியும். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி மூலம் ஒரே நேரத்தில் 200 தொடர்பு எண்களை பகிர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.