விஜய் டிவி நடத்தி வரும் ,கமல் தொகுத்துவழங்கும்  பிக்பாசால் தன்னுடைய பெயரையும் குடும்ப மானத்தையும் இழந்த ஜூலி வீட்டை விட்டு வெளியே தலைகாட்ட முடியாமல் தவித்து வருகிறார்.
முன்னதாக பிக்பாஸ் வீட்டை விட்டு ஜூலி வெளியேறினாலும் ஒரு முழுக்க பாதுகாப்பாக வைத்திருந்துதான் அனுப்பி உள்ளது விஜய் டிவி.
அந்த நேரத்தில் தனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பணத்தை கேட்டுள்ளார்.அப்போது உங்கள் கணக்கு வழக்குகளை எல்லாம் பார்க்க வேண்டும். அதற்கு சில நாட்கள் ஆகும்.

அதன்பிறகு வந்து வாங்கி செல்லுங்கள் என்று கூறி உள்ளது. தற்போது வீட்டை விட்டு சென்றாலேயே கோபத்தில் உள்ள ரசிகர்கள் துரத்த ஆரம்பித்து விடுகின்றனர்.நிலைமை இப்படி இருக்க எப்படி வெளியே சென்று பணத்தை வாங்குவது என தவித்து வருகிறார் ஜூலி.நடிகைகள் என்றால் அவரது மேனேஜரை வைத்து பணத்தை வாங்கி விடுவார்கள்.எதாவது பிரச்னை என்றால் தனது வக்கீலை வைத்து சமாளித்து விடுவார்கள்.

ஆனால் ஜூலியால் இதெல்லாம் சாத்தியமா என தெரியவில்லை. ஒரு வகையில் பிக்பாஸ் இந்த அளவக்கு சக்சஸ் ஆக ஜூலியும் ஒரு காரணம்.
அவர் பரணி மற்றும் ஓவியாவுக்கு எதிராக நடந்து கொண்டதுதான் இந்தளவுக்கு சாமானிய மக்களிடமும் பிக்பாசை கொண்டு சேர்த்தது.
ஆனால் அவரே இன்று தனது பணத்தை வாங்க முடியாமல் தவித்து வருகிறார்.

ஒரு வேளை தனது தோழிகள் அல்லது வேறு யாரையாவது அனுப்பி வைத்தால் சொல்லியபடி பணத்தை தருவார்களா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது. விஜய் டிவிக்கும், பிக்பாசுக்குமே வெளிச்சம்