வாட்ஸ்ஆப்பிற்கு இணையாக எந்தவொரு மெஸேஜிங் பயன்பாடும் இல்லை என்று நாம் நினைத்தால் அதிலொரு தவறுமில்லை. ஆனால், அதையே வாட்ஸ்ஆப் நிறுவனம் நினைத்தால் அது தலைகணம், எந்தவொரு தலைகணமும் அழிவில் முடிந்ததாய் தான் வரலாறு கூறுகிறது. ஆக எப்போதும் புதுமையை புகுத்திக் கொண்டே இருக்க வேண்டிய நிலைப்பாட்டில் வாட்ஸ்ஆப் உள்ளது.

இல்லையெனில் போட்டியாளர்கள் தூக்கி சாப்பிட்டு விடுவார்கள். அதனை நன்கு அறிந்து தெளிந்து பணியாற்றும் வாட்ஸ்ஆப் அவ்வப்போது சில அருமையான அப்டேட்ஸ்களை (கடைசியாக நிகழ்த்திய ஸ்டேட்டஸ் அப்டேட் தவிர்த்து) நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. மாதிரியாக வாட்ஸ்ஆப் அதன் சேன்ஜ் நம்பர் மற்றும் லைவ் லோக்கேஷன் ஆகிய அம்சங்களை புகுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

 

உங்கள் தொடர்பு எண்ணில் மாற்றம் ஏற்படும் போது எல்லாமே எளிமையாக இருக்கும் வண்ணம் வாட்ஸ்ஆப் ஒரு புதிய வசதியை சோதித்து உள்ளது. இதன்படி அடிக்கடி மொபைல் எண்ணை மற்றும் பயனர்களுக்கு ஒரு கடுமையான பணி தவிர்க்கப்படும்.

அதாவது முன்பு நீங்கள் உங்களின் எண்ணை மாற்றினால் உங்களின் சாட்டிற்குள் நுழைந்தால் தான் நீங்கள் எண்ணை மாற்றியுள்ள விவரம் பிறருக்கு தெரிய வரும். இந்த புதிய அம்சம் மூலம் நீங்கள் உங்களின் எண்ணை மாற்ற னது உங்களின் அனைத்து நண்பர்களுக்கும் தானாகவே காட்சிப்படுத்தி விடும்.

இந்த அம்சத்தில் உங்களின் தேவைக்கு ஏற்ற வண்ணம் ஆன் மற்றும் ஆப் செய்து கொள்ளும் வசதியும் அடக்கம். இதுமட்டுமின்றி சமீபத்தில் பேஸ்புக் மற்றும் கூகுளில் அறிமுகப்படுத்தப்பட்ட லைவ் லோக்கேஷன் பகிர்வு அம்சமானது வாட்ஸ்ஆப்பிலும் தோன்றுகிறது.

புதிய சேன்ஜ் நம்பர் அம்சம், விண்டோஸ் தொலைபேசி அல்லது விண்டோஸ் 10 மொபைல் பயனர்களுக்கான பீட்டா 2.17.130 பதிப்பில் காணப்படுகிறது. இது ஒரே நேரத்தில் எண் மாற்றப்பட்டுள்ளது என்பதை உங்களின் எல்லா தொடர்புகளுக்கும் தெரிவிக்க உதவும்.

லைவ் லோக்கேஷன் பகிர்வு அம்சத்தை பொருத்தம்மட்டில் ஆண்ட்ராய்டு வி2.17.150 வாட்ஸ்ஆப் பீட்டாவில் இடம்பெறுகிறது. ஆனால் டீபால்ட் ஆப்ஷன் கொண்டு முடக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.