சிறைக்கு செல்லும் முன்பாக ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய குற்றவாளி சசிகலா ஏதோ முனகிய படியே ஜெயலலிதாவின் சமாதியின் மேல் ஓங்கி 3 முறை அடித்து சபதம் ஏற்றார். அந்த சபதம் என்ன என்று தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக இருந்தனர்.

இந்நிலையில் அது என்ன சபதம் என தெரியாமல் குழம்பிய மக்களை அதிமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் தெளிவுபடுத்தியுள்ளது. அவர் என்ன முனுமுனுத்தார் என்பதையும் அதிமுக ஐடி விங்க் தனது டிவிட்டர் பக்கத்தில் மிகத் தெளிவாக பதிவிட்டுள்ளது. அதை நீங்களும் பாருங்கள்…

சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன். இது தான் அந்த சபதமாம். ஏற்கனவே அதிமுக டிவிட்டர் பக்கத்தில் சசிகலாவை கழுவி கழுவி ஊற்றி வரும் நெட்டிசன்கள் சசிகலா ஓங்கி அடித்ததையும் அவரது சபதத்தையும் வச்சு செய்து வருகின்றனர்.