அஞ்சில வளையாதது ஐம்பதுல வளைஞ்சிருமா.? சிம்புவால் தலையில் துண்டை போட்டு உட்கார்ந்திருக்கும் கமல்

நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தின் மூலமாக ரீ.என்ட்ரி கொடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில், அண்மையில் வெளியான பத்து தல படம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில், இவரை வைத்து கமலஹாசன் தனது ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் மூலமாக படம் பண்ண பிளான் செய்தார்.

இப்படத்தை துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியாகி ஹிட்டான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க கமிட்டானார். மேலும் இப்படத்தில் சிம்பு அண்ணன், தம்பி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், அதற்கான கெட்டப்புகளிலும் சிம்பு வலம் வந்தார். இதனிடையே இப்படத்தின் ஷூட்டிங்கிற்கு சிம்பு சரியாக வராமல் வழக்கமான தனது பழைய வேலையை ஆரம்பித்து வருகிறாராம்.

Also Read: சிம்புவை போல் வாட்டி வதைக்கும் கெட்ட நேரம்.. பொண்டாட்டியை தொலைத்த கையுடன் தொடர்ந்து வரும் சிக்கல்கள்

நடிகர் சிம்பு என்னதான் சிறந்த நடிகராக இருந்தாலும், இவரை வைத்து படம் பண்ண பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தயங்க தான் செய்வார்கள். அதற்கான காரணம் இவர் ஷூட்டிங்கிற்கு வராமல் இருப்பது, கால்ஷீட் கொடுத்துவிட்டு டிமிக்கி கொடுப்பது, அட்வான்ஸ் பணத்தை வாங்கிவிட்டு படத்துக்கு தேதியே கொடுக்காமல் இருப்பது என இவர் செய்யும் அலுச்சாட்டியம் கொஞ்ச நெஞ்சம் கிடையாது.

இதனாலேயே இவரது மார்க்கெட்டை பல வருடங்கள் தொலைத்து இருந்தார். ஆனால் இந்த விஷயத்தை மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த பின் சற்று தனது பழக்க வழக்கங்களை ரசிகர்களுக்காக மாற்றியுள்ளதாக அவரே கூறினார். ஆனால் தற்போது மீண்டும் கமல் தயாரிப்பில் நடிக்கும் படத்தில் தனது வேலையை காட்ட ஆரம்பித்துள்ளார்.

Also Read: முடிஞ்சத பாத்துக்கோன்னு காலரை தூக்கிய சிம்பு தரப்பு.. இன்னும் பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வராத ஐசரி கணேஷ்

இந்த படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு இரண்டு மாதங்கள் தாய்லாந்து நாட்டில் சிம்பு ஓய்வெடுத்து வந்தார். அதற்கு பின்பாகவாது படத்தின் ஷூட்டிங்கிற்கு வருவார் என எதிர்பார்த்த நிலையில், தற்போது மொரீஷியஸ் நாட்டில் ஜாலியாக என்ஜாய் பண்ணி வருகிறாராம். சிம்பு இப்படி நாடு, நாடாக சுற்றி வருவதற்கு பிரபல தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் தான் காரணமாம். நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்துக்கு முன்பாகவே கொரோனா குமார் படத்தில் நடிக்க கமிட்டானார்.

இந்த படத்துக்காக அவர் 30 லட்சம் ரூபாய் சம்பளமும் பெற்ற நிலையில், படப்பிடிப்புக்கு போகாமல் டிமிக்கி கொடுத்துள்ளார். இதனால் காண்டான ஐசரி கணேஷ் தற்போது சிம்பு மீது நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு முடியும் வரை சிம்பு வேறு படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, தற்போது உலகநாயகன் கமலஹாசன் சிம்புவை என்ன செய்வது என தெரியாமல் தலையில் துண்டைப் போட்டு உட்கார்ந்துள்ளாராம்.

Also Read: சிம்பு என் தம்பி மாதிரின்னு சொல்லிட்டு பெரிய ஆப்பாக சொருகிய தயாரிப்பாளர்.. அந்தரத்தில் தொங்கும் எஸ்டிஆர் 48

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்