Varalaxmi

சர்கார் படத்தில் வரலட்சுமியின் வேடம் என்ன? கசிந்தது தகவல்

சர்கார் படத்தில் நடித்து வரும் வரலட்சுமியின் கதாபாத்திரம் குறித்த சுவாரசிய தகவல் இணையத்தில் லீக்காகி இருக்கிறது.

varalakshmi

மெகா ஹிட் வெற்றியை பெற்ற மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் 62வது படம் சர்கார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. விஜயுடன் கீர்த்தி சுரேஷ் ஜோடி போட்டு இருக்கிறார். படத்தின் இசையமைப்பு பணியை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் செய்து வருகிறார். எப்போதுமே முருகதாஸ் – தளபதி கூட்டணியில் உருவாகும் படத்தில் ஒரு சமூக பிரச்சனை மையமாக வைத்து பேசப்படும். முன்னதாக, வெளியான கத்தி படத்தில் தண்ணீர் தட்டுப்பாடும், துப்பாக்கி படத்தில் ஸ்லீப்பர் செல்லையும் கொண்டு கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

அதிகம் படித்தவை:  முதல்முறையாக ஜி.வி.பிரகாஷுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்

இதை தொடர்ந்து, உருவாகி வரும் இப்படத்தில் அரசியல் களம் கதை பின்னணியாக அமைக்கப்பட்டு இருப்பதாக பலரும் கிசுகிசுத்தனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக, படத்திற்கு சர்கார் என்ற பெயரை படக்குழு அறிவித்துள்ளது. இதனால், சமகால அரசியல் குறித்து இப்படத்தில் காட்சிகள் இடம் பெற்று இருக்கலாம் என்கிறது கோலிவுட் தரப்பு. பெருவாரியான படப்பிடிப்பை முடித்து இருக்கும் படக்குழு, தற்போது அமெரிக்காவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. அங்கு விஜயின் இண்ட்ரோ பாடலும் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

அதிகம் படித்தவை:  எதுவாக இருந்தாலும் என்னை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள்- பிரச்சனையில் நடிகை

இந்நிலையில், இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். அவருக்கு என்ன கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருக்கும் என அனைவரும் யோசித்த வந்த நேரத்தில், தற்போது அது குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வரலட்சுமி இப்படத்தில் முதலமைச்சரின் மகளாக நடிக்க இருப்பதாக தெரிகிறது. அதிலும், வெளிநாட்டில் இருந்து வந்துள்ள இந்திய பெண்ணாக நடித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. எனினும் இவருக்கு இப்படத்தில் நெகடிவ் வேடமாக இருக்கும் என்கிறது கோலிவுட் பட்சி.