பிரபுவுக்கு வந்த பெரும் சோதனை.. தளபதி66ல் தலையை சுற்ற வைக்கும் கதாபாத்திரங்கள்

விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். கொஞ்சம் ஆக்ஷன் படங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மீண்டும் ஒரு குடும்ப சென்டிமென்ட் படத்தை கொடுக்கலாம் என யோசித்த விஜய் இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது.

ஆனால் இதில் சில கதாபாத்திரங்கள் இன்னும் முடிவு செய்யாமலேயே உள்ளது. விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது. அதேபோல் சரத்குமாரும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் விஜய்யின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மைக் மோகன், பிரஷாந்த், ஷியாம் போன்ற நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மோகன் மற்றும் பிரஷாந்த் மறுத்த நிலையில் ஷியாம் மட்டும் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் நேற்று தளபதி 66 படத்தில் பிரபு நடிக்கயுள்ளார் என்ற செய்தியை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதனால் பிரபு இந்த படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கயுள்ளார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஒருவேளை விஜய்க்கு மூத்த அண்ணனாக பிரபு நடிக்கயுள்ளார் எனக் கூறப்படுகிறது. ஆனால் விஜய்க்கு அப்பாவாக சரத்குமார் நடிக்கயுள்ளார் என்ற தகவல் அரசல் புரசலாக வெளியாகியுள்ளது. இதனால் பிரபுவுக்கு அப்பாக சரத்குமார் என்பதை யூகிக்கவே முடியவில்லை.

இதனால் சரத்குமார் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை அவரும் அண்ணன் கதாபாத்திரத்தில் தான் நடிக்கயுள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் படம் வெளியான பிறகுதான் இந்த சஸ்பென்ஸ் உடையும். அதுவரைக்கும் ரசிகர்களை தலைசுற்ற வைக்கும் அளவிற்கு இந்த படத்தில் உறவுமுறை ஏராளமாக உள்ளது.

Next Story

- Advertisement -