‘ஆரம்பம்’, ‘என்னை அறிந்தால்’, ‘வேதாளம்’, சமீபத்தில் வெளிவந்த ‘கருப்பன்’, தெலுங்கில் வெளிவர இருக்கும் ‘ஆக்ஸிஜன்’… படங்களின் தயாரிப்பில் இருந்து வருகிறேன். தயாரிப்புத் துறையில் என் முன்னோடி என் மாமனார்தான்.” இப்படி தன் மாமனார் ஏ.எம்.ரத்னத்தை கொண்டாடுகிறார் மருமகள் ஐஸ்வர்யா. படத்தயாரிப்பாளரான ஐஸ்வர்யா தற்போது பாடகியும்கூட.

மேலும்  ஐஸ்வர்யா கூறியதாவது “திருமணத்துக்கு முன்பு வேலைக்கு போய்க்கொண்டு இருந்தேன். அப்போது கல்யாணத்துக்கு பிறகு ரெஸ்டாரென்ட் ஆரம்பிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது.

அப்படி சென்னை போரூரில் ‘அகிலாபுரம்’ என்கிற பெயரில் ஒரு ரெஸ்டாரென்ட் ஆரம்பித்தேன் அது இப்போது பெரிய அளவில் பெயரெடுத்து இருக்கிறது. அங்கே சமைத்துத்தரும் ஆந்திர ஸ்பெஷல் பிரியாணியை அதிகமானோர் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

தினமும் அங்கு சென்றுவிடுவேன். பிரியாணி உள்ளிட்ட நான்-வெஜ் உணவுகளுக்கான ரெசிப்பிகளை நானே தயார் செய்து கொடுப்பேன். இந்த ரெஸ்ட்டாரென்ட் கடந்த ஒன்றரை வருடமாக நடக்கிறது.

எங்கள் ரெஸ்டார்டென்டில் உணவு தவிர ஐஸ்கிரீமும் ரொம்ப ஸ்பெஷல். நானே ஸ்பெஷலாக ‘குரு’ என்கிற சாய்பாபா பெயரில் தயாரித்து ஐஸ்கிரீம் விற்கிறோம்.

அதிகம் படித்தவை:  விவேகம் பட வில்லன் விவேக் ஓபராய் அஜித் ரசிகர்களுக்கு விடுத்த சவால்!

நீங்க ஒருமுறை எங்க ரெஸ்டாரென்டுக்கு வந்தீங்கன்னா என் ரெசிப்பீஸ் பிடிச்சிடும்.”

“’ஆரம்பம்’, ‘ என்னை அறிந்தால்’, ‘ வேதாளம்’ என்று அடுத்தடுத்து அஜித் நடித்த மூன்று படங்களை தயாரித்து உள்ளீர்கள். இந்த பயணங்களின்போது அஜித் என்ன சொன்னார்?”

“ ‘ஆரம்பம்’ ஆரம்பித்தபோது எனக்கு கல்யாணம் நடந்தது. அப்போது நான் அதிகமாக ஷூட்டிங் ஸ்பாட் போகமாட்டேன். அலுவலகத்தில் இருந்து நிர்வாகத்தை கவனித்துக்கொண்டேன்.

அதனால் அஜித்சாரை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ‘அந்த சமயத்தில் எனக்கு டெங்கு காய்ச்சல். ‘ஆரம்பம்’ ரிலிஸுக்கு முன்பு போஸ்டர் டிசைனை பார்த்த அஜித் சார், அதில் என் பெயரை பார்த்ததும் என்னைப்பற்றி விசாரித்து இருக்கிறார்.

எனக்கு டெங்கு காய்ச்சல் என்பதை கேள்விப்பட்டு, எனக்கு போன்செய்து உடல்நிலையை பார்த்துக்கொள்ளும்படி அட்வைஸ் பண்ணினார். மேலும் என் பெயர் போஸ்டரில் வந்ததற்காக வாழ்த்துக்கள் சிஸ்டர் என்று தெரிவித்தார்.

அதிகம் படித்தவை:  அஜித்தை கடுப்பாக்கிய அந்த ஒரு விஷயம்.! தற்பொழுது விஜய் சேதுபதிக்கும்.! என்ன நடக்குமோ?

அடுத்து ‘என்னை அறிந்தால்’ சமயத்தில் நான் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டேன். அப்போது என் பிறந்தநாள் வந்தது. எனக்கு பிறந்தநாளை பெரிதாக கொண்டாடும் வழக்கம் இல்லை.

அன்று திடீரென என்னை மாடிக்கு அழைத்து சென்ற அஜித் சார், அங்கே முன்பேயே பிரம்மாண்ட பிறந்தநாள் கேக் ரெடி செய்து வைத்து எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.

அதுதவிர அங்கேயே செங்கற்களை அடுக்கி வைத்து நெருப்பு உண்டாக்கி ‘என்னை அறிந்தால்’ படக்குழுவில் இருந்த அத்தனை பேருக்கும் என் பிறந்தநாள் விருந்தாக தந்தூரி சிக்கன் சமைத்து கொடுத்து அசத்தினார்.

இது, ‘வேதாளம்’ சமயத்தில் நடந்த நிகழ்ச்சி. நான் போரூரில் ‘அகிலாபுரம்’ ஹோட்டல் ஆரம்பித்த விஷயத்தை அஜித்சாரிடம் சொன்னேன். சந்தோஷப்பட்டார்.

நான்-வெஜ் உணவு வகைகளுக்கு என்னென்ன மசாலா வகைகள் சேர்க்க வேண்டும் என்று ரெசிப்பி டிப்ஸ் நிறைய கொடுத்தார். அகிலாபுரம் ஹோட்டலுக்கு அஜித்சார் ஆசீர்வாதமும் இருக்கிறது என்பதில் சந்தோஷம்.”