சூப்பர்ஸ்டார், உலகநாயகன் உட்பட திரைப்படத் துறையினர் இன்றும் விஜயகாந்தை ‘விஜி’ என்றுதான் அழைப்பார்கள். 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை அவர் நடிகர் சங்கத் தலைவராகப் பதவி வகித்தார்.

அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அப்போது கடனில் இருந்த நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தது இவரின் நிர்வாகத் திறமைக்கு மிகப்பெரிய உதாரணம்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என்று பெயர் சூட்டியவர் விஜயகாந்த்.

2000-ம் ஆண்டில் தனது ரசிகர் மன்றத்திற்கென கொடியை அறிமுகப்படுத்தி பல படங்களில் அதைப் பயன்படுத்தவும் செய்தார். அரசியலுக்கு வருவேன் என சொன்னதோடு நிக்காமல் 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார்.

தனது ரசிகர்மன்றக் கொடியையே கட்சிக் கொடியாகவும் அறிவித்தார். அடுத்து வந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் தனி ஆளாகத் தன் கட்சியின் சார்பாக சட்டமன்றம் சென்றார்.

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்டு 29 சட்டமன்றத் தொகுதிகளை வென்றது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக கம்பீரமாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் விஜயகாந்த்.vijayakanth

சினிமா, அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற்ற விஜயகாந்த் தனது முன்கோபத்தாலும், உள்ளதை உள்ளபடிப் பேசிவிடுவதாலும் இழந்தவை அதிகம். இதையெல்லாம் விட இன்று ‘மீம்ஸ்’ விஜயகாந்தாய் சித்தரிக்கப்படுவது காலத்தின் சோகமான நீட்சி.

பிக்பாஸ் என்றால் என்ன..! அதிர்ச்சி அடைய வைத்த விஜயகாந்த்..! என்ன சொன்னார் தெரியுமா?

கேப்டன் விஜயகாந்த் தற்போது மீண்டும் பரபரப்பாக பல மீடியாக்களுக்கு பேட்டியளித்து வருகின்றார். இதில் சமீபத்தில் ஒரு வார இதழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

vijayakanth

இதில் இவரிடம் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கின்றீர்களா? என்று ஒரு கேள்வியை கேட்க உடனே கேப்டன் ‘பிக்பாஸுன்னா என்ன’ என்று கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

பிறகு சில நொடி கழித்து மீண்டும் ‘ஓ கமல் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றாரே அதுவா?, அதெல்லாம் பார்க்க நேரமில்லைப்பா, எப்போதாவது மகனுடன் ஹாலிவுட் படம் பார்ப்பேன்’ என்று கேப்டன் கூறியுள்ளார்.