Connect with us
Cinemapettai

Cinemapettai

நான் சிகரெட் பிடித்தால் உங்களுக்கென்ன! ஆண்ட்ரியா அட்டாக்

Andrea

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நான் சிகரெட் பிடித்தால் உங்களுக்கென்ன! ஆண்ட்ரியா அட்டாக்

தரமணி படத்தில் நடித்த பிறகு நடிகை ஆண்ட்ரியாவிற்கு பாராட்டும், தூற்றுதலும் சரமாரி பொழிந்து கொண்டுவருகிறது. தரமணி படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கேற்ப தத்ரூபமாக நடித்திருந்தார். ஆனால் சமூக வலைதளங்களிலும், சில பொது சங்கங்களும் ஆண்ட்ரியாவை வறுத்தெடுத்து வசைபாடுகின்றனர்.

இது பற்றி ஆண்ட்ரியாவிடம் நடந்த ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது

“இது ஒரு அழகான சிறந்த ரோல், ராம் கதையை சொன்னவுடன் எனக்கு பிடித்துபோய் நடிக்க ஒப்புக்கொண்டேன், அம்மா ரோலில் நான் பச்சை கிளி முத்துச் சரம் படத்திலேயே நடித்துள்ளேன், எனவே இந்த படம் எனக்கு எளிதாக இருந்தது.

பலர் இந்த படத்தில் நான் சிகரட் பிடித்ததையும், மது அருந்தியதையும் உண்மைபோல் பாவித்து சரமாரியாக திட்டுகின்றனர். அப்படியே நான் நிஜ வாழ்க்கையிலும் சிகரெட் பிடித்தால் அதனால் உங்களுக்கென்ன? சிகரெட் பிடிப்பதை மட்டும் கவனிக்கும் நீங்கள் அதில் நான் பைக் ஒட்டியதை ஏன் கவனிக்கவில்லை. என்னை பொறுத்தவரை சிகரெட் பிடிப்பது பைக் ஓட்டுவதைவிட எளிது.kamal-andrea

என் காரை சிலபேர் தொடர்ந்து வந்து தொந்தரவு செய்கின்றனர். அதற்காக பயப்படுபவள் நான் இல்லை. பெண்களுக்கு முதலில் மரியாதை கொடுங்கள் வேறெதுவும் தேவையில்லை. படத்தை படமாக பாருங்கள், நான் நடித்திருந்தது கதாபாத்திரம் மட்டுமே, அதை உண்மை என்று கருதுவதை முதலில் நிறுத்துங்கள்.

இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, நான் ராமிற்கு நன்றி சொல்ல கடமைபட்டுளேன். இதுபோன்ற நல்ல கதைகள் இருந்தால் யார் இயக்கினாலும் கட்டாயம் நடிப்பேன்.”

இவ்வாறு தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: முடிவா இந்த பொண்ணு என்னதான் சொல்ல வருது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top