அட்லீ இயக்கத்தில் விஜய் தன்னுடைய 61வது படத்தில் தெறியாக நடித்து வருகிறார். படத்தில் நாயகிகளாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா நடிக்கிறார்கள்.

மேலும் சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு என ரசிகர்களின் ஆசை நடிகர்களும் இப்படத்தில் இருக்கிறார்கள்.

சென்னையில் தற்போது நடந்துவரும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் 80களில் நடக்கும் விஷயங்கள் படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் 10 நாளில் இப்படப்பிடிப்பு முடியும் என கூறப்படுகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே என்று இன்னும் சரியாக தெரியவில்லை. ஆனால் இதற்கு முன் படக்குழு France செல்ல முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு நடுவில் இப்படத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லீக் ஆகி படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.