கடும் அரசியல் விமர்சனங்களை ட்விட்டரில் பகிர்ந்து வரும் கமல்ஹாசன் அவர்களை நேற்று டெல்லி முதர்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் நேரில் சந்தித்தார்.

நேற்று விமானம் மூலம் சென்னை வந்த கேஜ்ரிவால் அவர்களை கமல்ஹாசனின் இளைய மகளான அக்சராஹாசன் விமான நிலையம் சென்று வரவேற்றார்.

அங்கிருந்து உலகநாயகனின் ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு சில செக்குரிட்டி மற்றும் கட்சி துணைகளுடன் வந்த கேஜ்ரிவாலை வீட்டின் வாசல் சென்று வரவேற்றார் கமல். வீட்டினுள் நுழைந்ததும் கேஜ்ரிவாலுக்கு மலர்கொத்து கொடுத்து வரவேற்றார் கமல்.

கமல்ஹாசன் வீட்டில் இருந்த பிரத்யாக அலங்கரிக்கப்பட்ட அறையில் அவர்கள் சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்தது. இது குறித்து கேஜ்ரிவால் தெரிவித்தபோது “ஊழலுக்கு எதிரான குரல் கமல்ஹாசனுடையது. எங்கள் கட்சியின் நோக்கமும் அதுவே. ஒருமித்த கருத்துக்கள் இருந்ததால் நட்பின் முறையிலேயே இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இது ஒரு அரசியல் சந்திப்பல்ல” என்று தெரிவித்துள்ளார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க