தெறித்து ஓடிய தமன்னா! என்னதான் ஆச்சு? - Cinemapettai
Connect with us

Cinemapettai

தெறித்து ஓடிய தமன்னா! என்னதான் ஆச்சு?

News | செய்திகள்

தெறித்து ஓடிய தமன்னா! என்னதான் ஆச்சு?

நம்ம அவந்திகா தமன்னா இருக்காங்களே பாகுபலி introductionல பல பேரு துரத்தும்போது தெறித்து ஓடுவாங்களே அதே மாதிரி இப்போ ரியலா ஓடிருக்காங்க. இருங்க எங்க எதுக்குன்னு சொல்றோம்.

பாகுபலி படங்களுக்கு பின்னாடி அதுல நடிச்ச எல்லாருக்குமே சினி இன்டஸ்டிரில ஒரு பெரிய இடம் கிடைச்சுருசுங்க. நம்ம தமன்னாவும் அப்படிதான் கையில் நல்ல படங்கள், பெரிய சம்பளம்னு சந்தோசமா இருக்காங்க.

தமிழ்ல விக்ரம் கூட Sketch, விஷ்ணு கூட பொன் ஒன்று கண்டேன், ஹிந்தில காமோஷி, தெலுங்குல சுந்தீப் கிஷான் கூட ஒரு படம்னு ஜாலியா இருந்த இவுங்க ஹைதராபாத்ல பட விஷயமா ஒரு இடத்துக்கு போயிருக்காங்க.

அங்க திரண்ட கூட்டம் கட்டுக்கடங்காம ரவுண்டு கட்ட பதறிப் போன தமன்னா அப்பவே கொஞ்சம் ஜர்க் ஆகிருக்காங்க. அங்க வந்த பத்திரிகையாளர்கள் தமன்னாவிடம் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் பற்றி கேட்டுள்ளார்கள் அதற்கு தமன்னா “பாகுபலிக்கு பிறகு எனக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது எனது சினிமா வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக போய் கொண்டிருக்கிறது” என்றார்.

Tamanna Bhatiaசந்தோசமா இருக்கேன்னு சொன்னது பொறுக்காமல் ஒரு பத்திரிக்கையாளர் “போதை பொருள் விவகாரத்தில் பல நடிகர் நடிகைகள் பெயர்கள் வெளிவந்துள்ளன, இதில் டோலிவுட்டின் முன்னணி ஹீரோயினாகிய நீங்கள் என்ன கருத்து சொல்ல விரும்புகிறீர்கள்” என்று கேட்டார்.

கேட்டதும்தான் தாமதம் “No Comments” என்று சொல்லிவிட்டு தமன்னா அங்கிருந்து தெறித்து ஓடியுள்ளார். திடீர் என்று அவர் ஓடியது அங்கிருந்த பல பேருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போதை பொருள் பயன்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நடிகைகள் ரவிதேஜா, நவ்தீப், தருண், தனிஷ், நந்து, நடிகைகள் சார்மி, முமைத்கான்.1

இவர்கள் வரிசையில் தமன்னாவும் இருப்பாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது தமன்னாவின் ஓட்டம்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்:

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top