தனது மகள் வரலட்சுமியிடம் ஒருவர் சில்மிஷம் செய்துள்ள நிலையில் நடிகர் சரத்குமார் பெண்கள் பற்றி ட்வீட் செய்துள்ளார்.

நடிகை பாவனா படப்பிடிப்பில் இருந்து வீடு திரும்பியபோது காரில் கடத்தப்பட்டு 2 மணிநேரம் மானபங்கப்படுத்தப்பட்டார். இதனால் சக நடிகைகள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தைரியமாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றின் நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவு தலைவர் தன்னிடம் தவறாக பேசி சில்மிஷம் செய்ததாக வரலட்சுமி சரத்குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

வரலட்சுமியின் தந்தை சரத்குமார் பெரிய நடிகர், நடிகர் சங்க தலைவராக இருந்தவர். வரலட்சுமியின் சித்தியான நடிகை ராதிகா பெரிய திரை தவிர்த்து சின்னத்திரையிலும் பெரிய ஆள். அப்படி இருந்தும் ஒருவர் வரலட்சுமியிடம் இப்படி நடந்துள்ளார்.

பெண்ணை அவமதிக்கும்போது எல்லாம் ஒருவர் ஆணாக இருக்க தகுதியில்லாதவராக ஆவதாக சரத்குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சரத்குமாரின் ட்வீட்டை பார்த்த ஒருவர் சரியாக சொன்னீர்கள் என பதில் அளித்துள்ளார்.