நீட் தேர்வு காரணமாக, 1176 மதிப்பெண் பெற்ற தமிழக மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, தமிழகத்தில் மாணவர்களின் உரிமை வலுப்பெற்று வருகிறது.

தமிழகத்திற்கு நீட்தேர்வில் இருந்து விலக்கு கோரியும், மறைந்த அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்,நடிகராக உள்ள சூர்யாவுக்கு மருத்துவர்களின் நீட் தேர்வு பற்றி எப்படி முழுமையாக தெரியும் என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

சூர்யா போன்றோர் கோடிக்காக பணியாற்றும் போது நாங்கள் தெருக்கோடியில் பணியாற்றினோம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் நீட் தேர்வு மூலம் கிராமப்புற மாணவர்கள் உட்பட அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அனிதாவின் இறப்பு மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் உணர்வுள்ள அனைவரும் இணைந்து போராடி வருகின்றனர்.