மெர்சல் பட ஆடியோ வெளியிட்டு விழா நேற்று நடந்தது. விஜய் இதுப்போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் ஒரு சிறுப் புன்னகையோடு ஓரு சில வார்த்தைகள் மட்டுமே பேசுவார்.

ஆனால் கடந்த சில மாதங்களாக பொது விஷயங்களையும், பேசி வருகிறார். இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்து வருகிறது. நேற்றும் ஒரு குட்டிக் கதை, படத்தை பற்றி ஒரு பன்ச் டயலாக், வாழ்க்கைக்கு சில டிப்ஸ் என 10 நிமிடம் பேசினார்.

நெகட்டிவை தடுப்பதற்க்கு அதை புறக்கணியுங்கள், எதிரிகள் இல்லாவிட்டால் நம்மை நிரூபிக்க தேவையில்லாமல் போய்விடும். அதனால் நம்மை வெறுப்பவர்கள் இருப்பதும் நல்லது தான் என்றார்.

மெர்சல் படம் தேனாண்டாள் ஃபிலிம்ஸின் 100வது திரைப்படம், ஏ.ஆர். ரகுமானின் 25வது வருடத்தின் இசையில் அட்லியின் இயக்கத்தில் வெளிவரும் படம் ஆகும். தீபாவளி ரீலிஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.