கோலிவுட்டையே ஆளும் பாக்ஸ் ஆபிஸ் சக்கரவர்த்திகள் அஜித், விஜய். இவர்கள் படம் வருகின்றது என்றாலே லட்சக்கணக்கான தமிழ் மக்கள் குஷியாகிவிடுவார்கள்.

இந்நிலையில் இன்று தமிழ் சினிமாவையே ஆளும் இவர்கள் முதன் முதலாக எங்கு சந்தித்துக்கொண்டார்கள் தெரியுமா? பார்ப்போம் வாருங்கள்.

அஜித் அமராவதி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது விஜய்யின் நாளைய தீர்ப்பு படத்தின் படப்பிடிப்பும் நடந்தது.

அப்போது இருவரும் ஒரே இடத்தில் இருந்தும் பெரிதும் கண்டுக்கொள்ளவில்லை, ஆனால், அமராவதி பட ரிலிஸின் போது தான் அந்த நிகழ்வு நடந்தது.

அஜித் தன் முதல் படத்தின் முதல் காட்சியை சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் பார்த்துக்கொண்டு இருந்தார்.

அப்போது ஒரு இளைஞர் படை உள்ளே வர, அதில் ஒருவரை மட்டும், அஜித்துடன் அமர்ந்திருந்தவர்கள் கைக்கொடுத்து வரவேற்க, அவரும் சிரித்துக்கொண்டே கையைக்கொடுத்து அமர்ந்தார்.

உடனே அஜித்துடன் வந்தவர் அந்த இளைஞரிடம் ‘இவர் தான் அஜித்’ என அறிமுகப்படுத்த, அவரும் ‘ஹாய் பாஸ், நான் விஜய், ஆல் தி பெஸ்ட்’ என்று கூறி அமர்ந்தார்.

அன்று தெரிய வாய்ப்பில்லை, இன்று தமிழ் சினிமாவையே ஆளும் இரு துருவங்களாக நாம் இருப்போம் என்று அவர்களுக்கு, அன்றிலிருந்து இன்று வரை விஜய், அஜித்தின் நட்பு அப்படியே நல்ல முறையில் நீடித்து வருகின்றது.