இந்தியாவை சாய்க்க இவர்கள் வேணும்.. இரண்டு அதிரடி வீரர்களை களமிறக்கிய வெஸ்ட் இண்டீஸ்

ஆகஸ்ட் மாதம் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோத உள்ளதால் இரு அணிகளின் வீரர்கள் தேர்வு முடிவடைந்து விட்டது. இதில் முக்கியமாக தல தோனி இடம்பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி.

வெஸ்ட் இண்டீஸ் அணி தனது வீரர்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டது அதில் முக்கியமாக டி20 தொடரில் அதிரடி பேட்ஸ்மேனான  பொல்லார்ட், சுனில் நரேன் இடம் பெற்றுள்ளனர். இது இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த T20 தொடர்களில் மேற்கிந்திய தீவு அணிக்கு பெரும் பக்கபலமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த அணியின் முழு விவரம்,

 1. பிராத்வெயிட் (கேப்டன்),
 2. ஜான் கேம்பல்,
 3. எவின் லெவிஸ்,
 4. ஹெட்மையர்,
 5. நிக்கோலஸ் பூரன்,
 6. பொல்லார்டு,
 7. ரோவ்மன் பாவெல்,
 8. கீமா பால்,
 9. சுனில் நரேன்,
 10. காட்ரல்,
 11. ஓஷானே தாமஸ்,
 12. அந்தோணி பிராம்பிள்,
 13. ஆண்ட்ரே ரசல்,
 14. காரி பியர்ஸ்

Leave a Comment