மேஷம்:

பொது: சுக்கிரனும் கேதுவும் அனுகூலமாக உலவுகிறார்கள். சூரியன் ஜன்ம ராசியில் இருந்தாலும் நலம் புரிவார். குரு வக்கிரமாக இருப்பதால் அனுகூலம் உண்டாகும். வாரப் பின்பகுதி சிறப்பாக அமையும். முக்கியமான காரியங்கள் நிறைவேறும். வாழ்க்கை வசதிகள் பெருகும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். உயர் பொறுப்புக்கள் தேடிவரும். திருமாலையும். விஷ்ணு துர்கையையும் வழிபடுவது நல்லது.

பொருளாதார நிலை, குடும்பம்: வாரப் பின்பகுதியில் பண நடமாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். வாழ்க்கைத்துணைவராலும் தந்தையாலும் அளவோடு நலம் உண்டாகும். தாய் மாமனாலும், மக்களாலும் சில இடர்ப்பாடுகள் ஏற்படும்.

நிலபுலங்கள்: 28, 29 தேதிகளில் நிலபுலங்களால் வருவாய் கிடைக்கும். சொத்துக்கள் சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும்.

தொழில்: கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரப் பெறுவார்கள். அரசுப்பணியாளர்களுக்கு செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. தொழிலாளர்கள் அதிகம் பாடுபட வேண்டிவரும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களால் வருவாய் கிடைக்கும்.

மாதர்களுக்கு: சுபச் செலவுகள் ஏற்படும்.

மாணவர்களுக்கு: முன்னேற்றம் காணக் குறுக்கீடுகள் இருந்துவரும்.

பணம் வரும் தேதிகள்: ஏப்ரல் 28, 29

ரிஷபம்:

பொது: குரு, சுக்கிரன், கேது ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். புதன் 12-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் ஓரளவு நலம் உண்டாகும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு உதவுவார்கள். வார முன்பகுதி சிறப்பாக அமையும். புத்திசாலித்தனம் வெளிப்படும். தோற்றப் பொலிவு கூடும். தெய்வப் பணிகள் நிறைவேறும். சனிக்கும் சூரியனுக்கும் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: பண நடமாட்டம் வார முன்பகுதியில் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல், ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நிகழும். மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களாலும், தந்தையாலும் பிரச்னைகல் சூழும்.

நிலபுலங்கள்: பழைய சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்களை வாங்க வாய்ப்பு உண்டாகும். பராமரிப்புச் செலவுகள் சற்று அதிகரிக்கவே செய்யும்.

தொழில்: உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். ஆசிரியர்கள் வளர்ச்சி காண்பார்கள். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், மூலம் லாபம் கிடைக்கும். ஆன்மிகவாதிகள் தங்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள்.

மாதர்களுக்கு: உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். முக்கியமான எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.

மாணவர்களுக்கு: முன்னேற்றமான பாதை தெரியவரும். விளையாட்டு விநோதங்களில் பாதுகாப்பு தேவை.

பணம் வரும் தேதிகள்: ஏப்ரல் 23, 25

மிதுனம்:

பொது: சூரியன், புதன், ராகு ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை. சந்திரன் 10, 11-ஆமிடம் இடங்களில் உலவுவது சிறப்பாகும். இதனால் முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். அறிவாற்றலும் தோற்றப்பொலிவும் கூடும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். 28, 29 தேதிகளில் சிறு சங்கடம் ஏற்படும். முருகனை வழிபடுவது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: வார முன்பகுதியில் பண வரவு திருப்தி தரும். பின்பகுதியில் எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதுடன், கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதும் அவசியமாகும். குடும்ப நலம் சிறக்கும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும்.

நிலபுலங்கள்: சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. புதன் அனுகூலமாக உலவுவதால் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும்.

தொழில்: அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். அரசுப்பணியாளர்கள் தங்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள். நிர்வாகிகளுக்கு வரவேற்பு கூடும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். பூர்விகத்தொழில் வளர்ச்சி பெறும். இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. ஆன்மிகவாதிகளுக்கு பிரச்னைகள் சூழும்.

மாதர்களுக்கு: முக்கியமான காரியங்கள் நிறைவேறும். நல்லவர்களின் ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும்.

மாணவர்களுக்கு: படிப்பில் முன்னேற்றம் காணலாம். விளையாட்டு விநோதங்களைத் தவிர்ப்பது நல்லது.

பணம் வரும் தேதிகள்: ஏப்ரல் 23, 24, 25

கடகம்:

பொது: சூரியன், செவ்வாய், வக்கிர குரு, சுக்கிரன் ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். உயர் பதவிகளும் பொறுப்புக்களும் இப்போது வந்து சேரும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். அரசு உதவி கிடைக்கும். மனத்துணிவு கூடும். செயல் திறமை பளிச்சிடும். தோற்றப்பொலிவு கூடும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். நாக பூஜை செய்து வருவது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: வாரப் பின்பகுதியில் பண வரவு அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். குடும்ப நலம் சீராகவே இருந்துவரும். தந்தையாலும், உடன்பிறந்தவர்களாலும் அதிகம் நலம் உண்டாகும். வாழ்க்கைத்துணை நலம் சிறக்கும்.

நிலபுலங்கள்: சொத்துக்களின் சேர்க்கை நிகழும். சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைத்துவரும். பழைய சொத்துக்களைப் புதுப்பித்துக் கொள்ளச் சந்தர்ப்பம் உருவாகும்.

தொழில்: கலைஞர்கள் வெற்றிப் படிகளில் ஏறுவார்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இனங்களால் ஆதாயம் கிடைக்கும். பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும்.

மாதர்களுக்கு: புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். குரு ஸ்தானத்தில் உள்ளவர்களின் ஆசிகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு: வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

பணம் வரும் தேதிகள்: ஏப்ரல் 26, 27

சிம்மம்:

பொது: சூரியன், செவ்வாய், வக்கிர புதன், வக்கிர குரு, சுக்கிரன் ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். செல்வாக்கும் மதிப்பும் உயரும். வாழ்க்கை வசதிகள் கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். சுப காரியங்கள் நிகழும். தான, தர்மப்பணிகளிலும், தெய்வப்பணிகளிலும் ஈடுபாடு அதிகரிக்கும். வாரப்பின்பகுதியில் முக்கியமான காரியங்கள் இனிது நிறைவேறும். எதிரிகள் விலகிப் போவார்கள். போட்டிப் பந்தயங்களிலும்; வழக்கு, வியாஜ்ஜியங்களிலும் வெற்றி கிட்டும். சர்ப்ப சாந்தி செய்து கொள்வதுடன் சனிப் பிரீதி செய்து கொள்வதும் நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: வாரப் பின்பகுதியில் பண நடமாட்டம் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். ஸ்பெகுலேஷன் துறைகளால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். தந்தையாலும், உடன்பிறந்தவர்களாலும் அதிக நலம் உண்டாகும்.

நிலபுலங்கள்: புதிய சொத்துக்களின் சேர்க்கை நிகழும். செவ்வாய் 10-ல் அமர்ந்து 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால் சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைக்கும். சொத்து சம்பந்தமான காரியங்கள் இனிது நிறைவேறும்.

தொழில்: கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை வெளிப்படும். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கிட்டும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவற்றைப் பெறச் சந்தர்ப்பம் உருவாகும். இயந்திரப்பணிகள் லாபம் தரும்.

மாதர்களுக்கு: மன மகிழ்ச்சி கூடும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் சக்தி உண்டாகும்.

மாணவர்களுக்கு: அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். விளையாட்டுகளில் வெற்றி கிடைக்கும்.

பணம் வரும் தேதிகள்: ஏப்ரல் 28, 29

கன்னி:

பொது: கேது ஒருவரே கோசாரப்படி சாதகமாக உலவுகிறார். இதர கிரக நிலை சிறப்பாக இல்லை. இதனால் எதிலும் விசேடமான நன்மைகளை எதிர்பார்க்க இயலாது. எதிரிகள் இருப்பார்கள் என்றாலும் கேது பலத்தால் சமாளித்து விடுவீர்கள். உடல் நலம் ஒருநாள் போல் மறுநாளிராது. கண், கால் பாதம் மற்றும் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும். ஜாதக பலம் இருக்குமானால் கவலைப்படத் தேவையில்லை. நவக்கிரக வழிபாடு செய்வது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: பண வரவு குறைந்து செலவுகள் கூடும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது அவசியமாகும். கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. குடும்ப நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். தந்தையாலும், வாழ்க்கைத்துணைவராலும் பிரச்னைகள் சூழும். உடன்பிறந்தவர்கள் அளவோடு உதவுவார்கள்.

நிலபுலங்கள்: சொத்துக்களால் அதிக பயன் இராது. பராமரிப்புச் செலவுகள் கூடும்.

தொழில்: ஆன்மிக, அறநிலைய, ஜோதிடப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் விழிப்புடன் இருந்தால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். எக்காரியத்திலும் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது.

மாதர்களுக்கு: பிரச்னைகள் சற்று அதிகரிக்கும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. அக்கம்பக்கத்தாரிடம் வீண்வம்பு கூடாது.

மாணவர்களுக்கு: படிப்பில் அதிக அக்கறை செலுத்தினால்தான் முன்னேற முடியும்.

பணம் வரும் தேதி: ஏப்ரல் 23

துலாம்:

பொது: வக்கிர புதன், வக்கிர குரு, ராகு ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். 5-ல் கேதுவும் 7-ல் சூரியனும் 8-ல் செவ்வாயும் இருப்பது சிறப்பாகாது. உடல் நலம் பாதிக்கும். வயிறு, கண், முதுகு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். மதிப்பும் அந்தஸ்தும் சாதாரணமாகவே காணப்படும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். வாரப் பின்பகுதி சோதனையானது. எதிலும் யோசித்து நிதானமாக ஈடுபடுவது அவசியமாகும்.

பொருளாதாரநிலை, குடும்பம்: பண வரவு குறைந்து, செலவுகள் கூடும். கைப்பொருள் காணாமல் போகவோ, களவு போகவோ கூடும். பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் அதிகரிக்கும். மக்களாலும், உடன்பிறந்தவர்களாலும் மன அமைதி குறையும். வாழ்க்கைத்துணை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். யாரிடத்திலும் கோபப்படாமல் நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது.

நிலபுலங்கள்: சனி வக்கிரமாகவும் பூமி காரகன் செவ்வாய் 8-லும் இருப்பதால் சொத்து சம்பந்தமான பிரச்னைகள் தலைதூக்கும். பக்குவமாகச் சமாளிப்பது அவசியமாகும்.

தொழில்: போக்குவரத்துச் சாதனங்கள், பயணம் சார்ந்த இனங்கள், தோல் பொருட்கள், கறுப்பு நிறப்பொருட்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும். இயந்திரப்பணியாளர்கள், இன் ஜினீயர்கள் ஆகியோர் விழிப்புடன் செயல்படுவது நல்லது. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். எதிலும் வேகத்தைக் குறைத்துக் கொள்வது அவசியமாகும்.

மாதர்களுக்கு: எதிரிகள் இருப்பார்கள் என்பதால் யாரிடத்திலும் விழிப்புடன் பழகிவருவது நல்லது.

மாணவர்களுக்கு: திறமைக்குரிய வளர்ச்சியைக் காணலாம். விளையாட்டு விநோதங்களைத் தவிர்க்கவும்.

பணம் வரும் தேதிகள்: ஏப்ரல் 23 (இரவு), 24, 25

விருச்சிகம்:

பொது: சூரியன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக உள்ளது. மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல் நலம் கவனிப்பின்பேரில் சீராகவே இருந்துவரும். புதிய பதவிகளும் பொறுப்புகளும் கிடைக்கும். தோற்றப்பொலிவு கூடும். பயணத்தின் மூலம் முக்கியமான எண்ணம் நிறைவேறும். சனி, கேது ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்து வருவது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: பண வரவு அதிகரிக்கும். கடன் தொல்லை குறையும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடிவரும். கொடுக்கல்-வாங்கல் பயன்படும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்பட்டு விலகும். தந்தையாலும், வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் உண்டாகும். மக்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். தாய் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும்.

நிலபுலங்கள்: சொத்து சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும். பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

தொழில்: அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு கூடும். கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். வேலையில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவார்கள். இயந்திரப்பணியாளர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.

மாதர்களுக்கு: மன மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மகப்பேறு பாக்கியம் கிட்டும். நற்காரியங்கள் நிகழும்.

மாணவர்களுக்கு: வெற்றி வாய்ப்புக்கள் கூடும். கணபதியை வழிபடுவது நல்லது.

பணம் வரும் தேதிகள்: ஏப்ரல் 26, 27

தனுசு:

பொது: சூரியன், செவ்வாய், வக்கிர புதன், வக்கிர குரு, சுக்கிரன், கேது ஆகியோர் அனுகூலமாக உல்வுகிறார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். எதிர்ப்புக்கள் விலகும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியம் நிறைவேறும். சனிப் பிரீதி செய்து வருவது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: வாரப் பின்பகுதியில் பண வரவு கூடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். குடும்ப நலம் சிறக்கும். வாழ்க்கைத்துணைவராலும் தந்தையாலும் உடன்பிறந்தவர்களாலும் நலம் உண்டாகும். வேலையாட்களால் சிறு சங்கடம் ஏற்படும்.

நிலபுலங்கள்: செவ்வாய் வலுத்திருப்பதால் நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.

தொழில்: இயந்திரப்பணிகள் ஆக்கம் தரும். இன் ஜினீயர்களது நிலை உயரும். அரசுப்பணியாளர்களது கோரிக்கை நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். உத்தியோகஸ்தர்கள், கலைஞர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோர் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். தொழிலாளர்கள் அதிகம் பாடுபட வேண்டிவரும்.

மாதர்களுக்கு: கேளிக்கை, உல்லாசங்களிலும்; விருந்து, உபசாரங்களிலும் ஈடுபாடு கூடும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும்.

மாணவர்களுக்கு: முன்னேற்றமான பாதை தெரியவரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

பணம் வரும் தேதிகள்: ஏப்ரல் 28, 29

மகரம்:

பொது: சுக்கிரன் அனுகூலமாக உலவுகிறார். குரு 9-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் முழுமையான சுப பலன்களைப் பெற முடியாமல் போகும். புதன் 4-ல் வக்கிரமாக இருப்பது சிறப்பாகாது. சர்ப்ப தோஷமும் இருப்பதால் சிறுசிறு இடர்ப்பாடுகள் ஏற்படவே செய்யும். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். நாகரை வழிபடுவது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: பண நடமாட்டம் சாதாரணமாகவே காணப்படும். கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி காண அரும்பாடுபட வேண்டிவரும். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும். மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.

நிலபுலங்கள்: சொத்துப் பிரச்னை ஏற்படும். அரசு விவகாரங்களில் எச்சரிக்கை தேவை.

தொழில்: கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். ஆடை, அணிமணிகளாலும் அழகு சாதனங்களாலும் வருவாய் கிடைக்கும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. பயணம் சார்ந்த இனங்களில் கவனம் தேவை. தொழிலாளர்களும் உத்தியோகஸ்தர்களும் அதிகம் பாடுபட வேண்டிவரும்.

மாதர்களுக்கு: நல்ல தகவல் வந்து சேரும். முயற்சி வீண்போகாது.

மாணவர்களுக்கு: டிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது.

பணம் வரும் தேதி: ஏப்ரல் 23

கும்பம்:

பொது: சூரியன், வக்கிர புதன், வக்கிர குரு, சுக்கிரன், சனி ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். உடல் நலம் சீராக இருந்துவரும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். புதிய பதவிகளும் பொறுப்ப்க்களும் கிடைக்கும். சுப காரியங்கள் நிகழும். திறமை வீண்போகாது. அரசு உதவி கிடைக்கும். நாகரை வழிபட்டு வருவது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: பண நடமாட்டம் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடிவரும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். கேளிக்கை, உல்லாசங்களிலும்; விருந்து, உபசாரங்களிலும் ஈடுபாடு கூடும். பேச்சில் இனிமை தவழும். வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும். பிதுரார்ஜித சொத்துக்கள் சேரும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள்.

நிலபுலங்கள்: சொத்துக்கள் மூலம் வருவாய் கிடைத்துவரும். சொத்துக்களைப் புதுப்பித்துக் கொள்வீர்கள். வாகன யோகம் உண்டாகும்.

தொழில்: கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். புதிய பதவிகள், பட்டங்கள் கிடைக்கும்.

மாதர்களுக்கு: மன உற்சாகம் பெருகும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். எதிர்ப்புக்கள் குறையும்.

மாணவர்களுக்கு: அளவோடு நலம் உண்டாகும். எதிர்ப்புக்கள் இருக்கும். பக்குவமாகச் சமாளிக்கவும்.

பணம் வரும் தேதிகள்: ஏப்ரல் 23, 24, 25

மீனம்:

பொது: செவ்வாய், சுக்கிரன், ராகு ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எடுத்த காரியத்தில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பிரச்னைகள் எளிதில் தீரும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும். எதிரிகள் அடங்குவார்கள். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். கண், வாய், முகம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் நலனில் கவனம் செலுத்தி வருவது நல்லது. சூரியனையும் குருவையும் வழிபட்டு வருவது நல்லது.

பொருளாதாரநிலை, குடும்பம்: பண வரவு அதிகரிக்கும். கடனாகக் கேட்டிருந்த பணம் கிடைக்கும். அரசு உதவி பெற வாய்ப்புண்டு. குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். உடன்பிறந்தவர்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். புதியவர்களின் நட்பு கிடைக்கும்.

நிலபுலங்கள்: செவ்வாய் வலுத்திருப்பதால் சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைக்கும். ஸ்ரீ வராஹரை வழிபடுவது நல்லது.

தொழில்: கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இன் ஜினீயர்களது நிலை உயரும். சிவப்பு நிறப்பொருட்கள் லாபம் தரும். பயணம் சார்ந்த இனங்களால் ஆதாயம் கிடைக்கும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள் மூலம் வருவாய் கூடும். சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள்.

மாதர்களுக்கு: மன உற்சாகம் கூடும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு உயர்பொறுப்புக்கள் தேடிவரும்.

மாணவர்களுக்கு: வெற்றி வாய்ப்புக்கள் கூடும். ஆராய்ச்சிகளில் ஈடுபாடு உண்டாகும்.