போன வாரம் வெள்ளிகிழமை திரி, ரூபாய், பண்டிகை, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், நீ என்ன மாயம் செய்தாய், அடிமைப் பெண், Team 5, சோக்காளி மைனர், War of the Planet of the Apes போன்ற படங்கள் வெளியாகின.
இந்த படங்கள்ல War of the Planet of the Apes மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கு.

சென்ற வாரம் GST வரி பிரச்சனை காரணமா எல்லா திரையரங்குகளும் மூடப்பட்டதால வெளியான திரைப்படங்கள் பெரும் வசூல் பாதிப்புக்கு உள்ளானது எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.

போராட்டம் வாபஸ் ஆன பிறகு கடந்த வெள்ளியன்று சென்னையில் 16 திரையரங்குகளில் வெளியான ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் திரைப்படம் சுமார் 54 லட்சமும், 17 திரையரங்குகளில் வெளியான பண்டிகை சுமார் 28 லட்சமும், ரூபாய் திரைப்படம் 21 லட்சமும், திரி திரைப்படம் 7 லட்சமும் வசூலித்துள்ளது.

கொசுறு: இரண்டு வாரங்களுக்கு முன் வெளிவந்த இவன் தந்திரன் திரைப்படம் போராட்ட தடைகளையும் தாண்டி ஒரு கோடியை தாண்டி வசூல் செஞ்சுருசாங்க!!!